Header Ads



ரிஷாத் கைது நடவடிக்கை பழிவாங்கல் அல்ல, கூக்குரலை பார்க்கும்போது சிரிப்பு வருகிறது - ஜனாதிபதி


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரிஷாத் பதியுதீன் மீது தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. அதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய ரிஷாத்தைக் கைது செய்ய பொலிஸார் விரைந்த போது அவர் ஓடி மறைந்துள்ளார். அவரைத் தேடும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ரிஷாத்தை கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது.

ரிஷாத் விவகாரம் நீதித்துறை சம்பந்தப்பட்டது. இதில் எவரும் தலையிட முடியாது. ரிஷாத் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Instead of laughing at the accusation that the attempt to arrest Badiudeen is politically motivated, you must ask yourself why an UNPRECEDENTED Six Police Teams has been deployed to arrest him and after several days he is YET to be arrested? Is any of the Big wigs from the Govt. giving him the hiding place, with your knowledge and agreement?

    ReplyDelete
  2. ஆனால் நீதிமன்ற நீதிபதிகளையும் சட்டமா அதிபரையும் நாங்கள் தீர்மானிப்போம் !

    ReplyDelete
  3. what the hell are you talking, criminal , you have done everything with defense and racism, now you talking rubbish , if you need to arrest him , you need to be arrested first, you are such a minority warmonger

    ReplyDelete
  4. அரசு பக்கம் இல்லை என்ற காரணத்துக்காக பல இண்ணல்கள் ....

    இது இப்போது happy...

    ReplyDelete

Powered by Blogger.