Header Ads



சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள, பயணத்தடையை நீக்க வலியுறுத்துங்கள் - சஜித்



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது, எமது இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று -23- வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் விசேட கூற்றொன்றை எழுப்பிய வேளையில் இந்த விடயங்களை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் வேளையில்  வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சரிடமும், ஜனாதிபதி, பிரதமரிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன்.

 எமது நாட்டின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. எனவே பொம்பியோவுடனான பேச்சுவார்த்தைகளின் போது எமது இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தில் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கவோ வேறு வழிகளில் தொடர்பு கொள்ளவோ அவசியம் இல்லை. 

அவர் இலங்கைக்கு வருகின்றார், நேருக்கு நேராக அவரை சந்திக்கப்போகின்றீர்கள். எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முன்னர் அவரிடம் இருந்து வாக்குறுதி ஒன்றினை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

1 comment:

  1. சஜித் சார், இது நடக்காது.

    உங்களுக்கு உங்கள் கட்சி கூட்டணிக்கு உள்ளேயே என்ன நடக்குது என்று தெரியவில்லை, இந்த லட்சனைத்திலே அமேரிக்க விடயத்தில மூக்கை நுளைக்கிறீங்க.
    முதலில் உங்கள் கூட்டணியிருக்கும் இரு துரோக கட்சிகளையும் வெளியேற்ற போருங்கள்
    அமேரிக்கா இங்கு வருவது இலங்கைக்கு எச்சரிக்கை கொடுக்கமட்டும் தான்

    ReplyDelete

Powered by Blogger.