October 29, 2020

உய்குர் முஸ்லிம்களை சீனா மிருகத்தனமாக நடத்துகிறது


அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா, மத சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த பாம்பியோ தற்போது இந்த கருத்தினை தெரிவித்து உள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போர் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும், மத சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிராகவும் உள்ளது என்றும், முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஃபாலுன் காங் பயிற்சியாளர்களிடம் சீனா ஒரே மாதிரியாக நடந்துகொண்டுள்ளது என்றும் பாம்பியோ இன்று முஸ்லீம் அமைப்பான நஹ்தலத்துல் உலமாவுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

மேலும், "நாத்திக சீன கம்யூனிஸ்ட் கட்சி, சிஞ்சியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களை மிருகத்தனமாக நடத்துவது பயங்கரவாத எதிர்ப்பு அல்லது வறுமை ஒழிப்பு என உலகத்தை நம்ப வைக்க முயன்றது," என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “பெய்ஜிங் சமூகத்தை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்து அதன் இஸ்லாமிய பாரம்பரியத்தை வேரறுக்க முயற்சிப்பதால் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.” என்றும்

“ரமாலான் காலத்தில் பன்றி இறைச்சியையும், உய்குர் இனக்குழுவின் முக்கிய நபரின் கல்லறையை அழித்தும் சீனா அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், மறுபுறம் தீவிரவாதத்தினை வேரறுக்க முயல்வதாக வெளியில் சொல்லி வருகின்றது.” என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.


5 கருத்துரைகள்:

Well Said USA!
ஆனால், பாக்கிஸ்தானும் இலங்கையை போல சீனாவிடம் Debt Trap யில் மாட்டியுள்ளது. கடனை கட்ட முடியாமல் ஒரு துறைமுகத்தை சீனாவிடம் கொடுத்துவிட்டது.

தற்போது சிறிய பிரச்சனைக்காக பிரான்ஸ் பொருட்களை பகிஸ்கரிக்க கூப்பாடு போடுபவர்கள் ஏன் சீனாவின் இந்த அநியாயத்திற்கு எதிராக போராட பயப்படுகிறார்கள். எல்லா முஸ்லிம் நாடுகளும் கோழைகள் தான் போலுள்ளது.

நீங்கள் மட்டும் என்ன குறைந்த ஆட்கள.

மதங்களின் பெயரால் உலகில் நடக்கும் கொலைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஒரு எல்லையே இல்லமால் போய்விட்டது. சிறு வயதில் என் பிள்ளைகள் என்னிடம் கேட்பது " நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? எந்த இறைவனை வணங்க வேண்டும்? என் பதில் " பிள்ளைகளே இறைவன் ஒருவன்தான். அவனுக்கு மதம் இல்லை சாதி இல்லை. இறை அச்சம் வேண்டாம். இறை அன்பு மட்டும் .போதும்." என் மனைவி என்னிடம் கேட்பது " நாம் இறந்தால் நம்மை எந்த மயானத்தில் அடக்கம் செய்வர்கள். என் பதில் " பயம் வேண்டாம் இறைவனின் பொது மயானம் இருக்கிறது." என் பிள்ளைகளிடம் நான் அடிக்கடி சொல்வது " எவரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மதம்,சாதி, இனம் உங்களை கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ." இன்றுவரை எந்த மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் என் பிள்ளைகளை அழைத்து சென்றதில்லை.

Your also same .america very bad then china.american govt killed our brotherhood in gulf.
All of you will get return soon as possible

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல்உள்ளது இவரனின் கதை

Post a Comment