Header Ads



அரசாங்கம் என்னை தகுதியற்றவனாக கருதுகிறது - விஜேதாச


அரசாங்கம் தன்னை தகுதியற்றவன் என்று நினைப்பதால், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அரசியல் பழிவாங்கல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கடந்த நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பு விவகாரங்களில் தன்னை தகுதியுடயவன் என கருதினாலும் தற்போதைய அரசாங்கம் தன்னை தகுதியற்றவனாக கருதியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சிறந்த விடயங்கள் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 20வது திருத்தச் சட்டத்தில் ஆபத்தான விடயங்கள் காணப்படுவதாகவும், விஜேயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


அவற்றை இந்த திருத்தச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவருக்கு எதிர்க் கட்சி தான் சரி. #Jumping case#

    ReplyDelete

Powered by Blogger.