Header Ads



ஏன் 'லொக்டவுன்' செய்யவில்லை - இராணுவத் தளபதியின் அழகான விளக்கம்


´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

´தெரண அருண´ நிகழ்ச்சியில் இன்று (06) இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறினார். 

முதல் தொற்றாளரான பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

அந்த பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு வருவதனை கருத்தில் கொண்டே மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். 

´குறித்த ஆடை தொழிற்சாலையில் 1400 பேர் தொழில் புரிகின்றனர். 400 பேர் துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர். மீதமுள்ள 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். ஆகவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை. அதனை செய்வது மிகவும் எளிதானது, ஆனால் அது நாடு முன்னேறும் வழியாக அமையாது´ என்றார். 

No comments

Powered by Blogger.