யாழ்ப்பாணம் – வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 78 வயதான குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment