Header Ads



நிகாப்பை தடை செய்து முஸ்லிம்களை, அந்நியப்படுத்த நான் விரும்பவில்லை - ரணில்


முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்து முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து தகவல் தராதிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைச் செய்யத் தயங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

1983 இனக்கலவரத்தினாலேயே விடுதலைப்புலிகள் பற்றிய தகவலை தமிழ் மக்கள் வழங்கவில்லை. இதனால் அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் தகவலை வழங்க இரண்டு வருடங்களுக்கும் அதிக காலம் எடுத்தது என்றார்.

முஸ்லிம் பெண்களின் நிஹாப் மற்றும் ஏனைய முகத்திரைகளுக்கு தடை செய்து அத்தகைய நிலைமை உருவாக்கப்பட்டது என்றார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று(13) சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து தகவல் வழங்கியிருந்தால் புலனாய்வு சேவைகளால் 2019 ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து ஏன் கண்டறிய முடியவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கேட்டதற்கு விக்கிரமசிங்க, “இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து பாதுகாப்பு படைகளுக்கு இஸ்லாமிய சமூகம் அதிகளவு தகவல்களை வழங்கினர்” என்றார். எவ்வாறாயினும் தகவலின் அடிப்படையில் செயற்பட வேண்டியது பாதுகாப்பு படைகள்தான் என்றார்.

இதேவேளை புலனாய்வு சேவைகளின் பலவீனம் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து வெளிப்படுத்த முடியாமைக்கு காரணமாக இருந்ததா என்ற கேள்விக்கு புலனாய்வு சேவைகளில் பலவீனம் இருந்தது தெளிவானது என்றார்.

இதேவேளை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கிரம சிங்கவிடம் “உங்கள் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏதாவது முரண்பாடுகள் இருந்தனவா என்ற கேள்விக்கு முக்கியமான முரண்பாடுகள் அங்கிருக்கவில்லை. அங்கே சில சிக்கலான நிலைமைகள் இருந்தன. பொதுவாக எந்த அரசாங்கத்திலும் அதைக் காண முடியும். ஆனால் அங்கே தீவிரமான நிலைமைகள் இருக்கவில்லை” என்றார்.

No comments

Powered by Blogger.