Header Ads



எந்தவித குற்றமும் செய்யாத ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) நிரபராதியாக ஒன்றரை வருடங்களின் பின் விடுதலை



கடந்த திங்கட்கிழமை (05.10.2020) அலுத்கடை (கொழும்பு) நீதிவான் நீதிமன்றத்தில் (இல - 8) நீதிபதி அவர்களால்  ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) (Psycho Analyst,  சமூக ஆர்வலர் - எழுத்தாளர்) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இவரது விடுதலை தொடர்பாக, சட்டமா அதிபர் ரூமி அப்துல் அஸீஸ் மீது, குற்றம் எதுவுமே இல்லை எனத் தெரிவித்ததுடன், பயங்கரவாத செயற்பாடு தொடர்பாக இவருக்கு எந்தவித தொடர்பும் இல்லையென உறுதியாகவும், திட்டவட்டமாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.


நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ரூமியின் வழக்குத் தொடர்பான  பொலிசாரும், தமக்கு இவரை விடுவிப்பதில் எந்தவித, ஆட்சேபனையும் இல்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.


இதனடிப்படையில் நீதிபதி ரூமியை எந்தவித, குற்றமும் செய்யாதவர் என்ற அடிப்படையில் (நிதாஸ் கோர்ட் நிதாஸ்  விடுதலை செய்ய, உடனடியாக உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.


21.04.2019 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்  தொடர்பில், 25.04.2019 அன்று ரூமி அப்துல் அஸீஸ் கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, தற்போது எந்தவித குற்றமோ அல்லது குற்றங்களுடன் தொடர்புடையவரோ அல்ல என, நிரூபிக்கப்பட்டு நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூமி சார்பில், பிரபல சட்டத்தரணி பாரிஸ் (இலங்கை ஜமாத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர்) ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.