Header Ads



மதூஸ் கொலை, எந்த ஒரு நாகரிக சமூகமும் மன்னிக்கக் கூடாது - சட்டத்தரணி சமிந்த


கொழும்பு - மாளிகாவத்தையில் பாதாள உலக முக்கியஸ்தர் மாகந்துரே மதூஸ் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு உண்மையான புனைகதை என்று அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி சமிந்த அத்துகோரளை இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

சட்ட விதிகளை மதிக்கும் ஒரு நாகரிக சமுதாயத்தில் சட்ட அமுலாக்க பிரிவுகளின் காவலில் இருந்த போதே கடந்த காலங்களில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் எந்த விசாரணையும் இன்றி தண்டிக்கப்படவில்லை. இந்த நிலையில் இவ்வாறான நடத்தைகளை எந்த ஒரு நாகரிக சமூகமும் மன்னிக்கக் கூடாது என்று சட்டத்தரணி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஒக்டோபர் 16ஆம் திகதி அன்று மதுஷை குற்றவியல் புலனாய்வுத் துறையிலிருந்து, கொழும்பு குற்றப்பிரிவுக்கு மாற்றியது சட்டவிரோதமானது மற்றும் அவரது கொலைக்கு முன்னோடியாக இருந்தது.

சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் தமது கட்சிக்காரர் குற்றவியல் புலனாய்வுத் துறையிலிருந்து கொழும்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி மதூஷின் மனைவி குற்றப்புலனாய்வு பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தமது கணவருக்கு உள்ள கொலை அச்சுறுத்தலை அவர் விபரித்துள்ளார். இந்தக் கடிதம் தமது கணவர் தொடர்பான தெளிவான அச்சத்தையும், பொலிஸ் காவலில் இருந்த போது தனது கணவர் கொலை செய்யப்படும் விதத்தையும் சுட்டிக்காட்டியுள்ளதாக மதூஷின் சட்டத்தரணி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் ஒரு துரோகி மீது இவ்வளவு பாசமா?

    ReplyDelete

Powered by Blogger.