Header Ads



அரசாங்கத்துடன் இணைவாரா றிசாத்..?


ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.


இன்று -01- வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இப்ராகிம் என்ற வர்த்தகர் எனது சகோதரருக்கு 7 முறை தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைதுசெய்திருந்தனர்.


இரு தினங்களில் விடுவிக்கப்படுவார் என்று அழைத்து செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்த வகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றசாட்டுடனும் அவர் தொடர்பில்லை என்றவகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும் போது குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் சொல்கிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.


உதிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் என்பது இந்த நாட்டில் 250 உயிர்களை பலியெடுத்த சம்பவம். இந்த நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம்.


500 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளார்கள். அவ்வாறான ஒரு சம்பவத்தில் யாரையும் சந்தேகப்படலாம். சந்தேகிக்கப்பட்டு கைது செய்வது, விசாரிப்பது என்பது வழமை. அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இந்த நாட்டு பிரஜைகளினது கடமை.


குண்டு வெடிப்பு பாதிப்போடு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்கு நானோ எனது சகோதரர்களோ இடைஞ்சலாக இருக்க மாட்டார்கள். எனவே எனது சகோதரன் நிரபராதி என்று ஐந்தரை மாதங்களுக்கு பின்னர் தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்தார்.


இதன்போது இந்த அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேசப்படுகின்றதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, பதில் கூற விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.

3 comments:

  1. ஆனால்...இங்கு அமைச்சர் பதவி கிடைக்காது.
    சிலவேளைகளில், வியாழேந்திரனின் உதவியாளர் பதவி கிடைக்கலாம்

    ReplyDelete
  2. முந்தய மஹிந்த மாத்தையா ஆட்சியின் போது தேசிய பட்டியல் வாங்கிய கையோடு கட்சி மாறிய சந்தர்ப்பத்தில் இது மிகவும் நயவஞ்சகத்தனம் இதனை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது என மஹிந்த மாத்தையா சொல்லியிருந்தார். அதன் பிரதிபலிப்பாக இருக்குமோ?

    ReplyDelete
  3. இங்கு ரிஷாட் அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா என்பது கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும் ஏனனில் அவரின் சகோதரை நீண்ட நாளுகளுக்கு பிறகு விடுதலை செய்து இருக்கின்றார்கள்,என்னுடைய கருத்து என்னவென்றால் அவரை மிரட்டி நிபந்தனையின் அடிப்படையில் தான் விடுதலை செய்து இருக்கிறார்கள் எங்களோடு அரசோடு சேறு இல்லையென்றால் தம்பி மீது இன்னும் பொய் குற்றம்சாட்டுகளை போட்டு சாதகாலமும் சிறையில் தான் வைப்போம் அல்லது கொலை செய்வோம் என்ற சாதிநிபந்தனை அடிப்படையில் தான் அவரை அரசோடு சேர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.(ராஜபக்ச சகோதரர்களை இலகுவாக நம்ப கூடாது )

    ReplyDelete

Powered by Blogger.