Header Ads



பிரெஞ்சு ஜனாதிபதிக்கு குவைத்தில் எதிர்ப்பு, அந்நாட்டின் பொருட்களை புறக்கணிப்பது ஆரம்பம்


பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக குவைத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது:

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு ஆசிரியரின் சாமுவேல் பட்டி(வயது 47) தலை பள்ளிக்கு வெளியே துண்டிக்கப்பட்ட பயங்கர கொலை கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை பிரான்ஸ் அதிபர் இமானுயெல் மேக்ரோன் “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்,மேலும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். 

இதையடுத்து அவருடைய கருத்துக்கு பல முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் அந்த நாடுகளின் மக்கள் பெரும் பல்வேறு வழிகளில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குவைத் மக்களும் பல்வேறு கடும் நடவடிக்கைகளில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

குவைத்தில் பிரெஞ்சு தயாரிப்புகளை பல கடைகள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்து வருகின்றனர். கடைகள் பல பிரெஞ்சு தயாரிப்புகளை கடையில் இருந்து அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் ஒரு  கார்ட்டூனிஸ்ட் படுகொலை செய்யப்பட்டதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக குவைத்தில் இந்ந  எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது.

குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்கவும், பிரான்சில் இருந்து குவைத் தூதரை திரும்பப் பெறவும், அரபு மற்றும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் கடந்த நாள் முதல் சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சின் நிலைப்பாடு இஸ்லாமிய உலகிற்கு அவமானம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பள்ளியில் கார்ட்டூன்களைக் காட்டிய சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியரின் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, இது இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செயல் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இஸ்லாமியத்திற்கு எதிரான தீவிரவாதம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை அவர்கள் ஏற்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பாட்டி கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு  நகரத்தில் வைத்து தலை வெட்டி கொல்லப்பட்டார், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கருத்து சுதந்திரம் குறித்து வகுப்பில் முஹம்மது நபி அவர்களின் கார்ட்டூன் காட்டப்பட்டது தொடர்பாக கொலை செய்யப்பட்டார். மேலும்  தாக்குதல் நடத்திய 18 வயது நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

7 comments:

  1. French are loosers (in France and Quebec). They have human rights for their own benefit so they can pick and choose.

    ReplyDelete
  2. French are loosers (in France and Quebec). They have human rights for their own benefit so they can pick and choose.

    ReplyDelete
  3. இதேபோல் இந்து தீவிரவாத நாடான இந்தியாவுடன் அரபு நாடுகள் அணைத்து உறவுகளையும் துண்டித்துகொள்ள வேண்டும் அங்கு பஞ்சம் பிழைக்க ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  4. first of all, every one regardless faith has to learn and understand to respect other people's faith. anyone has no right to interfere or humiliate others faith...?

    ReplyDelete
  5. @NGK இந்தியாவில் உள்ள முஸ்லீம்ளை அடித்து விரட்டிவிட்டு அதன் பிறகு அரபு நாடுகளில் உள்ள இந்துக்களை அனுப்புவது பற்றி யோசிக்கலாம் .அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் பஞ்சம் பிழைக்க சென்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்க்கும் முஸ்லிம்களையும் அந்தந்த நாடுகள் வெளியேற்ற வேண்டும்.

    ReplyDelete
  6. @NGK இந்தியாவில் உள்ள முஸ்லீம்ளை அடித்து விரட்டிவிட்டு அதன் பிறகு அரபு நாடுகளில் உள்ள இந்துக்களை அனுப்புவது பற்றி யோசிக்கலாம் .அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் பஞ்சம் பிழைக்க சென்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்க்கும் முஸ்லிம்களையும் அந்தந்த நாடுகள் வெளியேற்ற வேண்டும்.

    ReplyDelete
  7. @NGK இந்தியாவில் உள்ள முஸ்லீம்ளை அடித்து விரட்டிவிட்டு அதன் பிறகு அரபு நாடுகளில் உள்ள இந்துக்களை அனுப்புவது பற்றி யோசிக்கலாம் .அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் பஞ்சம் பிழைக்க சென்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை வளர்க்கும் முஸ்லிம்களையும் அந்தந்த நாடுகள் வெளியேற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.