Header Ads



மினுவாங்கொடை தொழிற்சாலை கொரோனா - சரியான விசாரணை நடத்த வேண்டும்


அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக விசேடமாக பாடுபட்டவர்கள் பௌத்த பிக்குமார் உட்பட சிங்கள தேசிய அமைப்புகள் எனவும் தற்போது இவர்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளதாகவும் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தேரர் இதனை கூறியுள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரர், சட்ட மா அதிபரின் ஆலோசனையின்றியும் நீதிமன்ற செயற்பாடுகள் இன்றியும் பொலிஸார் விடுதலை செய்தமையானது அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்துள்ள பெரிய அநீதி.


அத்துடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பாரதூரமான விடயமான இரட்டை குடியுரிமை தொடர்பாக கடும் விமர்சனங்கள் காணப்படுவதாகவும் ஒருவருக்கு தேவையானால் இரட்டை குடியுரிமையில் இருந்து விலகி, மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணி தொடர்பாக நிலவும் முரண்பாடுகள் குறித்து சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.


அதேபோல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த மருத்துவர் ஜயருவான் பண்டார, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமை அதிருப்தியளிப்பதாகவும் இப்படியான தன்னிச்சையான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மாகல்கந்தே சுதத்த தேரர் மேலும் தெரிவித்துள்ளளார்.

1 comment:

Powered by Blogger.