Header Ads



என்னை அவதூறு செய்த நபர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுப்பேன் - டயானா


சமூக ஊடகங்களில் தன்னை அவதூறு செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய பின்னர் சமூக ஊடகங்களில் தவறான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டதாக டயானா கமகே கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தான் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாகவும், அதனால்தான் 20வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விதிமுறை கூட ஆதரித்ததாகவும் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாக தன்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பான தகவல்களை இப்போது சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, டயானா கமகே கடந்த வாரம் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார், பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவை ஆதரிக்க முடிவு செய்தார்.

தனக்கு ஜனாதிபதி மீது நம்பிக்கை இருப்பதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அவருக்கு ஆதரவளிப்பதாகவும் டயானா கமகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Miss டயானா, நீங்கள் SLMC யில் சேர தான் லாயக்கு

    ReplyDelete
  2. மடம் அவர்களே மானநஷ்ட வழக்கு மட்டுமன்றி நட்டஈடும் கோரி வழக்குப் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.