Header Ads



மூதூரில் நில அளவையாளர்களுக்கு எதிர்ப்பு - வீதிக்கு வந்த பொது மக்கள்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் உள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டை குட்டியா ராம விஹாரைக்கு அருகில் உள்ள காணிகளை அளப்பதற்கு முயற்சித்த போது விகாரைக்கு அருகே உள்ள தமிழ், முஸ்லிம்களுடைய காணிகளும் உள்வாங்கப்படுவதாகவும், அதனால் பொது மக்களின் காணிகள் விகாரைக்கு சொந்தமாக்கப்படுவதாகவும் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறுகையில்,


குட்டியா ராம விகாரைக்கு அருகில் அதிகளவில் தமிழ், முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான காணிகள் அப்பகுதியில் இருப்பதுடன், நில அளவையாளர்கள் விகாரையை நில அளவை செய்வதனூடாக பொது மக்களுடைய காணிகளும் அவர்களால் பெற்றுக் கொள்ளப்படும்.


அக் காணிகளை மீட்பதற்காகவே நாம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


நில அளவையாளர்கள் அப்பகுதியைச் சுற்றி அளக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கும், நில அளவையாளர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்படுவதை தடுக்கும் முகமாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.