Header Ads



தேசியப் பட்டியலை தூக்கி வீசினார் ரணில், புத்தகம் எழுதுவதில் மும்முரம்


தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறித்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறுப்பட்டுள்ளது.


மேலும், இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் போக்கை வழிநடத்த தயாராக உள்ளனர் என்பதையும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டும் கிடைத்திருந்தது.


எனினும், தற்போது வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. If only he started writing the Book one year earlier, he would have done a great service to the UNP and the country, as the UNP would have remained Intact as one Party and would have performed better in the August Elections and would have most Certainly Prevented the SLPP from getting a 2/3rd Majority. Shame on you Mr. Wickremasinghe.

    ReplyDelete

Powered by Blogger.