Header Ads



பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து


பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு வரும் நபர்கள் ஆணையத்தின் இணைத்தளம் ஊடாக தங்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும்.


விற்பனை அனுமதி பத்திரம் கொண்டுள்ள விற்பனையாளர்களிடம் மாத்திரம் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


பயனாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் கையடக்க தொலைபேசி சட்டரீதியானதா என்பது தொடர்பில் தங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள 15 இலக்கங்கள் கொண்ட இமி இலக்கங்களை 1909 என்ற இலக்திற்கு அனுப்பி உறுதி செய்துக் கொள்ள முடியும்.


போலி கையடக்க தொலைபேசிகள் நாட்டிற்குள் கொண்டுவருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதற்கமைய பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி பாகங்கள் இரத்து செய்யப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. This is possibility to keep All the mobile devices under watch.

    If it is for safety of people and country.. Acceptable.

    BUT personnel information has no more privacy or security.

    ReplyDelete

Powered by Blogger.