Header Ads



A/L மாணவர்கள் அச்சமின்றி, பரீட்சைக்கு செல்லாம் - இராணுவ தளபதி


(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பிரதேசங்களிலிருந்து மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாரும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

விஷேட அறிவித்தல் மூலம் இதனைத் தெரிவித்த அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது :

சனிக்கிழமை இனங்காணப்பட்ட 105 தொற்றாளர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் உள்ளடங்குவதோடு ஏனையோர் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர். 

இந்நிலையில் தொற்றாளர்கள் முறையாக இனங் காணப்படுவதில்லை என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன.

தொழிற்சாலையுடன் நேரடி தொடர்பைக் கொண்ட அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதோடு உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் அச்சமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியும். எனவே அந்த பிரதேசங்களிலிருந்து யாருக்கும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.