Header Ads



சஹ்ரானை கைதுசெய்ய உத்தரவிட்டேன், தாக்குலினால் அதிர்ச்சியடைந்தேன், 6 மாதங்களே ரணில் ஒத்துழைத்தார் – மைத்திரி சாட்சியம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிய அதிகாரிகள் தங்கள் பணிகள் குறித்து அலட்சியமாகயிருந்தமையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனது நிர்வாகத்தின் போது முப்படைதளபதிகள் உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு நாட்டிற்கான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கினேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் மூலம் தேசிய நல்லிணக்க அமைச்சு என தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பினை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் அதனை தன்னால் உறுதி செய்ய முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

எனது பதவிக்காலத்தின் முதல் ஆறுமாதங்கள் மாத்திரமே பிரதமரும் அமைச்சரவையும் எனக்கு ஆதரவளித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரினதும் அமைச்சரவையினதும் முழுமையான ஆதரவு கிடைக்காமை காரணமாக பல பின்னடைவுகள் ஏற்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசசார்பற்ற அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகள் நாட்டில் பிரச்சினையை உருவாக்கி இனமுறுகலுக்கு வழிவகுத்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்பிரல் 16ம் திகதி என்னுடன் விமானநிலையத்துக்கு வந்த பொலிஸ்மா அதிபர் தாக்குதலொன்று இடம்பெறலாம் என எனக்கு தெரிவிக்கவில்லை,ஏப்பிரல் 14ம் திகதி புதுவருட கொண்டாட்டங்களுக்காக எனது வீட்டிற்கு வந்தவேளை அவரோ பாதுகாப்பு தளபதியோ இது குறித்து தெரிவிக்கவில்லை என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனது நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற சம்பவத்தினால் நான் அதிர்ச்சியடைந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. தனது நிலைகுழம்பிய நிலையில் மீண்டும் பொய்யை உளர ஆரம்பித்திருக்கும் இவருக்கு சட்டம் தான் சரியான பதில் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. Zahran was not arrested due to Nalaka drama and you didn't call security council meeting in many months so you can't tell high officers have not told information. You have failed your duty and responsibility for this.

    You have tried to divert the problem by searching mosques and houses, banning face cover etc. and these are not relevant to easter attack.

    ReplyDelete
  3. Both of them were traitors, that's why our country met with disasters.
    They preferred and fought for their own interest not for the nation...

    ReplyDelete

Powered by Blogger.