Header Ads



நாட்டில் இன்று செவ்வாய்கிழமை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


நாட்டில் மேலும் 164  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று -27- மட்டும் இதுவரை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவங்கொடை மற்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 447 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 10  பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 5,393  ஆக உயர்ந்துள்ளது.  

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,870 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  4,810 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நான்கு மாவட்டங்களில் 68 பொலிஸ் பிரிவுகளுக்கு  தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.