October 03, 2020

30 வருட இனச்த்திகரிப்பு - முஸ்லீம்களின் விடயத்தில் புதிய அரசு கவனம் செலுத்துமா..?..?


இனச்சுத்திகரிப்புக்குள்ளான  வடபுல முஸ்லீம்களின் சமால  நிலையும் தொடரும் அவலங்களும் . முப்பது வருட கொடிய யுத்தம் நாட்டின் பல்வேறுபட்ட பாரிய இழப்புக்களுக்கும் தியாகத்திற்கும் மத்தியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதில் பயணித்த யாவரும்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சுதந்திரக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்கவும்  மக்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அவரவர் கலாசார மரபுகளைப் பேணவும் ஒற்றுமையுடன் ஜனநாயக மரபுகளைப்பேணி வாழ்வதறகாக  நடைமுறையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் நாட்டின் தேசியபாதுகாப்பை உறுதிப்படுத்தி கௌரவமாக மக்களை பாதுகாக்கு வேண்டிள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு காத்திரமான முன்னெடுப்புக்களை செய்து வரும்  இந்த நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறுபட்ட மீள்கட்டமைப்பு புணருத்தான நடவடிக்கைகளையும் பல அபிவிருத்திகள் செயற்பாடுகளையும் மேற்கொண்டுவருவதைக்காணலாம். 

இவ்வாறான நிலையில் குறிப்பாக வட புலத்திலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட யாழ் ,கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம்களின் விடயம் மந்த கதியிலேயே நடைபெற்று வருவது வேதைனையான விடயமாகும். 

இதுவிடயமாக சர்வதேசம் முதல் அரசாங்கம் தொடக்கம், அரசநிர்வாகிகள் , அரசியல் பிரமுவர்கள் வரையில் பராமுகமாகவும் காலம் தாழ்த்தியுமே  இருந்து வருகின்றார்கள். இற்றை வரையில் வழங்கிய வாக்குறுதிகள் ஏறாளம். 

எனவே  இம்மக்களின் விடியலுக்காக                                     

1 ) விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து யதார்த்த உண்மைநிலையை அறிதலும் உலகறியச்செய்தலும்                           

2 ) காத்திரமான  அரசியல் தீர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதும் ஜனநாயக வழிமுறைகளை முறையாக பேணுவதும்                                           

3 )  மீள்குடியேற்றங்களுக்கு ஏதுவான திட்டமிடல்களை கட்டங்கட்டமாக மேற்கொண்டு பாதிக்கப்பட்டமக்களின் விடயங்களை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூரணமாக நிறைவு செய்தல்                                                                               

 4 ) முழுமையான இழப்பீடுகளையும் பகுதியளவான நஷ்டஈடுகளையும் வழங்கி  நஷ்ட ஈட்டுநடவடிக்கைகளை பூரமாகநிறைவேற்றல்                           

5 ) வாழ்வாதார வசதிகளையும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்                                  

6 ) சமூர்த்திக்கொடுப்பனவுகளை கிடைக்கச்செய்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரநிலையை உயர்த்துதல்  

7 )  காணி உரிமையாளர்களைின் காணிகளை கிடைக்கச வழி செய்து வைப்பதுடன் காணி உறுதிகளையும் வழங்குதல் என தொடரும் பிரச்சினைகளும் சவால்களும் தொடர்கதையாகவே இருந்துவருகின்றது.

  எனவே இவ்வாறாக முற்றுமுழுமையாக பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நிரந்தரமான தீர்வுகிடைக்க செய்யுமாறு  கௌரவ புதிய ஜனாதிபதி அவர்களிடம்  புதிய ஜனநாயக அரசிடமும் வடக்கிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட யாழ் கிளிநொச்சி சிவில் சமூகம் சார்பாக வேண்டுகின்றோம். எங்கள் நாடு எங்கள் கையில் என்ற மகுடவாசகத்திற்கு அமைவாக  இன, மதபேதமின்றி பாதிக்கப்பட்ட இந்த வடபுல முஸ்லீம்களில் இழந்த சகல உரிமைகளையும் , அசையும் அசையா சொத்துக்களுக்குமான இழப்பீடுகளையும் கிடைக்க ச்செய்வதுடன் பூரமாணதும் முழுமையுமான மீள்குடியேற்றங்களையும் அதனுடன்தொடர்பான  அனைத்து வீட்டுத்திட்ட நடவடிக்கைகளையும்      மேலும் அடிப்படை பொருளாதார வசதிகளையும் கிடைக்கச்செய்யுமாறு வேண்டுகின்றோம். 

பலலினமக்கள் வாழும் இத்தாய்த்திருநாட்டின் கௌரவத்திற்கும் தன்மானத்திற்கும் பாதுகப்புக்கும் ஏதுவாக சகல இன மக்களும் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அரசியல் சீராக்கத்தின்போது எமது இருப்புக்கு ஏதுவான கௌரவமான தீர்வுகளையும் கிடைக்கச்செய்து ஒற்றுமையாவும் ஒருதாய்மக்களாக வாழ்வதற்கான  சூழலை ஏற்படுத்தி சர்வதேச அரங்கில் சிறந்த ஜனநாயக நாடாக திகழச்செய்யுமாறு கௌரவமாகவும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான சமூகம்சார்பாகவும் வேண்டுகின்றோம்.                      


புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளனம்.                            

தலைவர் அப்துல் மலிக் 

செயலாளர் ஹஸன் பைறூஸ் .

3 கருத்துரைகள்:

தோழர் பேராசிரியர் ஹஸ்புல்லா மறைவுக்குப்பிறகு புலம்பெயர்ந்த வடபுல மக்கள் தொடர்பான ஆய்வுகளை யாழ் பல்கலைக்கழகமோ தென்கிழக்கு பல்கலைக்களகமோ ஈடுபடவில்லை என்பதை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. 1. ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக அமைக்கப்படுவது அவசியம். 2. வடபகுதி முஸ்லிம்கள், அகதியாக இருக்கும்போது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விற்ற காணிகள் கடைகள் அடையாளம் காணப்படவேண்டும். அச்சொத்துக்கள் விற்கப்பட்ட விலைக்கு மீண்டும் அதே குடும்பங்களுக்கு அல்லது வெறு வடபகுதி முஸ்லிம்களுக்கு விற்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 3, வடபகுதிக்கு வெளியில் புத்தளம்போன்ற பகுதிகளில் தொடர்ந்து வாழ விரும்பும் முஸ்லிம்களுக்கு மேற்படி பகுதிகளில் வாக்காளட் உரிமை காணி வீடமைப்பு வேலைவாய்ப்பு என்பவை உத்தரவாதம் செய்யப்படவேண்டும்.

No muslims will be allowed to North anymore

Anush.. No worries in after 20 years north will be sinhala majority province.on that time You peoples can only bark but can't do anything. As a Muslim I'm waiting for that beautiful moments

Post a comment