Header Ads



மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா


திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 246 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 


அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 


அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரது மகள் உட்பட மொத்தமாக 569 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

No comments

Powered by Blogger.