Header Ads



20 வது திருத்தம் குறித்து கவலை – ஜனாதிபதிக்கு ஒமல்பே தேரர் கடிதம்


20வது திருத்தம் குறித்து கரிசனை வெளியிட்டு ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

20வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தைகேள்விக்குறிய நிலைக்குள்ளாக்கும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் அரசாங்கத்தினை சிவில் சமூகத்தின் மத்தியில் பெருமளவிற்கு ஆதரவிழக்க செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தன்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவேண்டும்,20 திருத்தம் குறித்த மக்களின் கரிசனைகளை கருத்திலெடுக்கவேண்டும் என ஓமல்பே தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் ஜனநாயகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.