Header Ads



20 தொடர்பில் முஸ்லீம் காங்கிரஸ் செய்த, உடன்படிக்கை என்ன..? பகிரங்கப்படுத்த ஐதேக கோரிக்கை


20வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெளியிடவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத்தேர்தலின் போது 20வது திருத்தததை முஸ்லீம் காங்கிரஸ் எதிர்த்ததுடன் கட்சியின் கொள்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தது என ஐக்கியதேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

எனினும் மூடப்பட்ட கதவுகளின் பின்னால் இந்த அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைக்கு வந்துள்ளனர் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

19வது திருத்தம் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக விழுமியங்களை 20வது திருத்தத்தை ஆதரித்ததன் மூலம் முஸ்லீம் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லீம் மக்கள் மீண்டுமொரு அவர்கள் தெரிவுசெய்தவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்,பிரதமருடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து உண்மையை முஸ்லீம்காங்கிரஸ் வெளியிடாமலிருப்பது பொறுப்பற்ற ஒழுக்கமற்ற செயல் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அவர்களின் மௌனம் அவர்கள் முஸ்லீம் மக்களின் நலனிற்கு பாதகமான உடன்படிக்கையை செய்துள்ளனர் என்பதை புலப்படுத்துகின்றது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

3 comments:

  1. If the SLMC has made any secret "Deals" with the Govt. in the backdrop of 20A, it is certainly Reprehensible. But the UNP is least qualified to ask for details of any such "Deals" because the UNP itself made "Deals" with those involved in Corruption and Crime in the Administration prior to 2015 thereby Breaking its Election Promises and making it possible for the same people involved in Corruption and Criminal activities to come back to Power again.

    ReplyDelete
  2. கடந்த காலங்களில் முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியே தஞ்சம் என அவர்களின் காலடியிலேயே கிடந்தார்கள் .அப்படி இருந்தும் அதட்கு நன்றிக்கடனாக ஐக்கிய தேசிய கட்சி முஸ்லீம் சமூகத்திட்கு என்ன செய்தது .கொழும்பு முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் .ஆனால் அவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றார்கள் .போதைவஸ்து பாவனையாளர்களும் விட்பனையாளர்களும் அங்கே அதிகமாக காணப்படுகின்றார்கள் .இதுதான் ஐக்கிய தேசிய கட்சி செய்த சேவை .

    ReplyDelete
  3. They are "0" in parliament. From which corner are they raising this question???

    ReplyDelete

Powered by Blogger.