Header Ads



20 தேவையில்லை - அது பழங்குடி சமூகமொன்றை உருவாக்கும் - அமரபுர மகாசங்கம் அறிக்கை


20 வது திருத்தம் அபிவிருத்தியடையாத பழங்குடி சமூகமொன்றை உருவாக்கும் என, அமரபுர மகா சங்கம் கடும்கண்டனம் வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அமரபுர மகாசங்கம்; 20வது திருத்தத்தினை நிறைவேற்றக்கூடாது என அரசாங்கத்திற்கு மிகவும்; உறுதியான செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

20வது திருத்தம் கருத்து செயற்பாட்டு சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும் என இது இறுதியில் ஏதேச்சதிகாரம், கண்மூடித்தனமான குடும்ப ஆட்சி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் எனவும் அமரபுர மகாசங்கம் தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளது போல சில பலவீனங்கள் உள்ள போதிலும் 19வது திருத்தம் அரசாங்கம் தெரிவிப்பது போல பிற்போக்குத்தனமானது இல்லை என அமரபுர மகா சங்கம் தெரிவித்துள்ளது.

 குறித்த புதிய நகல் தேர்தல்,நீதி மற்றும் நீதித்துறை குறித்த சுயாதீன பொறிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அமரபுர மகாசங்கம் நீதிகோருவதற்கான மக்களின் உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

20வது திருத்தம் மோசடி ஊழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ள அமரபுர மகாசங்கம் நாட்டிற்கு புதிய அரசமைப்பே அவசியம் 20வது திருத்தத்தினை நிறைவேற்றக்கூடாது.

No comments

Powered by Blogger.