Header Ads



ஹட்டனில் 20 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த பஸ் - 49 பேர் படுகாயம்



டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்துள்ளது. 


டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (02) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 49 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 


பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 


இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதனை வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 


இவ்வாறு காயமமைந்தவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 


இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

No comments

Powered by Blogger.