Header Ads



20 க்கு ஆதரவளித்த 2 பேருக்கு, இராஜாங்க அமைச்சர் பதவி..?


சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்றும் இன்று இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

20 ஆவது திருத்தத்துக்கு எதிரணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் ஏழு பேர் என்பது கவனிக்கத்தக்கது.

இவர்களில் யார் யாருக்கு எவ்வாறான பதவிகளைக் கொடுப்பது என்பது குறித்தது அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

2 comments:

  1. Will the MP from Kalmunai, Harris, be one of the two?

    ReplyDelete
  2. அதி முக்கியம் என்னென்டா பாருங்கோ. இந்தக்காலத்தில் மந்திரிப் பதவியால எதனையும் சாதிக்க முடியாதுங்க. வீணான அலைச்சல்தான் மிச்சம். பசில் சேர் அமைச்சராக வந்தால் அமைச்சுப் பதவிகளின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கும். குசு விடுறதுன்னாலும் அவருக்கிட்டக் கேட்டுட்டுத்தான் விடனும். வெளங்கி எடுத்தால் சரிங்க. ஏதோ எரியுர வீட்ல புடுங்குற லாபம்னு 500 அல்லது 600 மில்லியன் காசை உருவிக்கிட்டு ஓடிட்டா சரி பாருங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.