October 19, 2020

1990 கரிய ஒக்டோபர் நினைவுகளும், இந்திய படை நடவடிக்கைகளும் (பகுதி 2, 3)


- எம்.எஸ்.எம். ஜான்ஸின் -

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புலிகளின் அரசியல் பொருப்பாளராக இருந்த திலீபன் உண்ணாவிரத்தை ஆரம்பித்து 26.9.1987 அன்று மரணமடைந்த பின்னர் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையிலான முறுகள் நிலை அதிகரித்தது. இந்திய படை முகாம்கள் எல்லாவற்றையும் புலிகள் முற்றுகையிட்டு படையினரை வெளியேறவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து இந்தியப் படை பல்வேறு முனைகளில் முன்னேறி முற்றுகைக்கு உள்ளாகியிருந்த முகாம்களை விடுவிக்கும் நோக்குடன் முன்னேறியிருந்தன்ர். இன்னோரு விஷேட படையணி பரசூட் மூலம் தரையிறங்கி பிரபாகரனைப் பிடிக்க திட்டம் போட்டது. பிரபாகரனை பிடிக்கும் திட்டத்துடன் 1987 ஒக்டோபர் 12 ஆம் நாள் ஹெலிகொப்டர்கள் மூலம் இந்திய பரா துருப்புக்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தறையிறக்கப் பட்டனர். அதில் 30 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். 

அதேவேளை இந்திய இராணுவம் பல்வேறு முனைகளாலும் முன்னேறி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர். இதில் ஒரு படைப்பிரிவு  அராலி வீதியூடாக முன்னேறி கோட்டையை அடைய முயற்சித்த வேளையில் அவர்கள் பொம்மைவெளி பரச்சேரி வெளியில் நிலைகொண்டு முஸ்லிம் பிரதேசத்தை நோக்கி ஷெல் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதனால் சில முஸ்லிம்கள் காயப் பட்டனர். 

இதனை அடுத்து பொம்மைவெளி, ஷாபி நகர், மதீனா நகர் , போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் காயப்பட்டவர்களுடன் அங்கிருந்து வெளியேறி ஒஸ்மானியாக் கல்லூரிக்குள்ளும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும்  தஞ்சமடைந்திருந்தனர்.  அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் எதுவும் இயங்கவில்லை. 

இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு ஒஸ்மானியாக் கல்லூரியில் சமையல் ஏற்பாடுகளை செய்தனர். வெறும் சோறு தான்.  சிலருக்கு சிறிதளவு  பருப்பு  கிடைத்தது. சிலருக்கு அது கூட கிடைக்கவில்லை. அன்றைய தினம் சோனகதெருவின் சில வீடுகளில் பட்டினி தான். வாழ்க்கையில்   முதல் முதலில்  எங்கள் வீட்டில் பருப்பும் சோறும் மட்டும் தின்றது அன்றுதான். இந்த கொரோனா முடக்கத்தில் ஊரில் எத்தனை வீடுகளில் பசி பட்டினியோடு மக்கள் இருப்பார்கள் என்று எண்ணும் போது அன்றைய எமது நிலமை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

 இந்த நிலையில் இரவிரவாக ஷெல் அடியும் துப்பாக்கிச் சண்டைகளும் நடந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டைத்தாண்டியும் ஷெல்கள் கூவிக் கொண்டு சென்றது. துப்பாக்கிச் சன்னங்கள் வானில் கண்டபடி பறந்தன. எங்கும் பயமயம்.  இன்நிலையில் திடீரென எல்லோரும் கூடி  ஒஸ்மானியாவுக்கு முன்னால் உள்ள எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி  சிவலைபள்ளிக்கு அண்மையில் இருந்த உறவினர்  வீட்டுக்குச் செல்வோம் என முடிவெடுத்து அவ்வாறு செல்லும் போது, வழியில் பயத்தின் காரணமாக அவர்களும் வெளியேறி எங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம். பீதியின் உச்சம் அன்று தாண்டவமாடியது. பிறகு புதுப்பள்ளிக்கு அண்மையில் உள்ள பென்சி ஹவுஸ் அனஸ் தங்கள் வீட்டில் நிற்குமாறு கூறினார். அவர் வீட்டில் அன்றைய இரவு தங்கினோம். அவருடைய வீட்டின் முன்பகுதியும் அறைகளுமே ஸ்லப் போடப்பட்டிருந்தன. 

அதிகாலை எழும்பி எல்லோரும் வை எம் எம் ஏ இக்கு பக்கத்திலிருந்த வீட்டுக்குச் சென்று தேணீர் அருந்திக் கொண்டிருக்கும் போது என்னுடைய மாமனார் வந்து எல்லோரும் பின்பக்கத்தால் வெளியேறி மீண்டும் ஒஸ்மானியா வீட்டுக்குச் செல்லுமாறு கூறினார். அவ்வாறு  வை எம் எம் ஏ பின்னாலுள்ள வீட்டிலிருந்து  நூறு அடிகள் நடந்திருப்போம் நாங்கள் இருந்த வீட்டின் மேல் ஷெல் விழுந்தது. நல்லவேளை எல்லோரும் நூறு அடிகளைக் கடந்திருந்தோம். அப்படியே வந்து ஒஸ்மானியா வீட்டில் தஞ்சமடைந்தோம். 

இதற்கிடையே சிலர் இந்திய இராணுவத்திடம் சென்று எமது பிரதேசத்தைத் தாக்க வேண்டாம் எனக் கேட்போம் எனக் கூறினர். நானும் எனது நண்பனும் அவர்களுடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை நோக்கி வெள்ளைக் கொடி ஏந்தியவர்களாக சென்றோம்.

எங்கும் துப்பாக்கிச் சூடு ஷெல் தாக்குதல்கள். பொம்மைவெளி பக்கமாக இருந்து மக்கள் காயத்துடன் ஒஸ்மானியா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  இளவயது பயமறியாது என்பதற்கேற்ப ஷெல் தாக்குதல் நடத்தப் படும் பகுதி நோக்கிச் செல்ல நாங்களும் அந்தக் குழுவுடன் நின்றோம். பிறகு நடந்தது என்ன?

இதற்கிடையே சிலர் இந்திய இராணுவத்திடம் சென்று எமது பிரதேசத்தைத் தாக்க வேண்டாம் எனக் கேட்போம் எனக் கூறினர். நானும் எனது நண்பனும் அவர்களுடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை நோக்கி வெள்ளைக் கொடி ஏந்தியவர்களாக சென்றோம்

முஸ்லிம் கல்லூரி வீதியிலிருந்து ஓட்டுமடம் நோக்கிச் செல்லும் வீதியிலுள்ள சந்தியில் இரண்டு புலி உறுப்பினர்கள் நின்றார்கள்அவர்கள் எங்களை எங்கே செல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நாங்கள் விபரத்தைச் சொன்னோம். அத்துடன் நாங்கள் சென்று வரும் வரை தாக்குதல் எதையும் நடத்த வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்றோம்அந்த சந்திக்கு நாங்கள் சென்ற  சமயம் எம்முடன் மேலும் பலர் இனைந்து கொண்டனர்அவர்களுடன் நாங்கள் முன்னேறி நடந்து ஒரு நூறு மீட்டர் பொம்மைவெளி நோக்கிச் சென்றிருப்போம். திடீரென பின்பக்கத்தில் வெடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். புலி உறுப்பினர்கள் வானை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு இந்திய இராணுவம் எம்மை நோக்கி சுட்டது. இரப்பர் ஷெலகளையும் அடித்தது. ஷெல்களும் வந்து வீழ்ந்தனபுலிகளிடம் சொல்லியும் அவர்கள் துரோகம் செய்தார்கள்

நாங்கள் எல்லோரும் அராலி வீதியிலிருந்து உள்புறமாக ஓடி நூற்றி ஐம்பது யாருக்கு அப்பால் உள்ள மையத்து பிட்டி ( இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யும் இடம்) வரை சென்று அங்கிருந்த சுவர்களின் பின்னால் ஒழிந்து கொண்டோம்சுமார் அரை மணி நேரத்தின் பின்னர் தாக்குதல் ஓய்ந்தது. சிலர் எம்மை அழைத்து நாம் மீண்டும் செல்வோம் என அழைத்தனர். ஆனால் பத்து பேரே அங்கு மீண்டும் ஒன்று சேர்ந்தனர். அவர்களை ஒன்று திரட்டி உள்வீதி வழியாக ஒன்பதாம் குறுக்குத் தெருவில் சென்று அராலி வீதியை அடைந்தோம். எம்மை புலிகள் காணவில்லை. ஆனால் இந்திய இராணுவம் எம்மைக் கண்டு சுட்டார்கள். நாங்கள் சுவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டோம்.  

இராணுவத்தை நோக்கி எம்மவர்கள் வெள்ளைக் கொடியை அசைத்தார்கள். அவர்கள் அங்கிருந்து சுட்டார்கள். பிறகு ஒரு தமிழ் இந்திய வீரர் முன்னேறி எம்மைத் திரும்பிச் செல்லுமாறு கூறினார். நாங்கள் அவருடன் பேச வேண்டுமென கூறினோம். நீண்ட நேரத்தின் பின்னர் அனுமதி கிடைத்தது இரண்டு பேரை வரும் படி சொன்னார்கள்.

இருவர் இந்திய இராணுவத்திடம் சென்று எமது செய்தியைச் சொன்னார்கள். அவர்கள் உடன்படவில்லை

பிறகு எமது மஹல்லா சின்னப் பள்ளிவாசலில் ஒன்று கூடி யாஸீன் ஓதி துஆ செய்யப் பட்டது. பிற்பகல் நல்லமழை . இந்திய இராணுவம் நின்ற பகுதியெல்லாம் வெள்ளமாகிவிட்டது. அந்த இடத்திலிருந்து கோட்டை ஒரு கிலோ மீட்டர் தான். அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.  

யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் யாழ் பல்கலைக்கழக தரையிறக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தான் நிலமை மோசமாகி மோதல் கடுமையாகியது. இந்தத் தாக்குதல் பற்றி அந்தத் தாக்குதலில் ஒரு பிரிவினருக்கு தலைமை வகித்த இந்திய இராணுவ மேஜர் ஷியோனன் சிங் தரும் தகவல்களைப் பார்ப்போம்

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட மறுத்ததும் விஷயங்கள் விபரீதமாகி, 1987 அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கொரில்லாப் போராக படிப்படியாக அதிகரித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு, தாங்கள் வலுவாக இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முயற்சியை தொடங்கியது.

இந்திய அமைதிகாக்கும் படையினர் தங்கியிருந்த பலாலி விமான நிலைய தலைமையகத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்தில் மோதல் ஆரம்பித்தது.

பிறகு ஷியோனான் சிங்கும், அவரது ஆட்களும் தாக்குதல் நடத்தி வரும் படையினருக்காக இடத்தை காலி செய்ய வேண்டியிருந்தது

இன்று இந்த மைதானம் பரந்த பச்சை புல்வெளிகளுடனும் பல்வேறு விளையாட்டு வசதிகளுக்கான வசதிகளையும் கொண்டிருக்கிறது.

"முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்கள் கொண்ட காட்டுப்பகுதியாக காணப்பட்டது. இங்கு ஒரு மரம் இருந்தது என்று குறிப்பாக சொல்கிறார் ஷியோனன் சிங்.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதை முன்னதாகவே தெரிந்து கொண்ட விடுதலைப்புலிகள் மூன்று புறங்களில் இருந்து தாக்குதல் நடத்தினார்கள்.

"அந்த கட்டடத்தின் தண்ணீர்த் தொட்டிக்கு பின்புறம் இருந்து எங்களை சுடத் தொடங்கினார்கள் என்று அந்த குறிப்பிட்ட கட்டடத்தையும் தொலைவில் இருந்து சுட்டிக்காட்டுகிறார் ஷியோனன் சிங்

இந்திய படைகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, எல்.டி.டி.ஈயின் தாக்குதலும் தீவிரமடைந்தது.

மேஜர் சிங்கும் அவரது படையினரும் அருகிலுள்ள இடங்களுக்கு நகர்ந்தார்கள். வீடுகளில் நுழைந்த அவர்கள் அங்கு குடியிருந்தவர்களை அறைகளில் பூட்டி வைத்துவிட்டு, அங்கிருந்தே தாக்குதலுக்கு தயாரானார்கள்.

அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்த சண்டையில் .பி.கே.எஃப், தனது 36 வீரர்களை இழந்தது.

"எங்கள் தரப்பில் முதலில் கொல்லப்பட்டவர் லக்ஷ்மி சந்த். ஹெலிகாப்டரில் இருந்து இலங்கை ராணுவம் எங்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. நாங்கள் இருந்த வீட்டின்மீது விழுந்த ஒரு வெடிகுண்டால் உமேஷ் பாண்டே இறந்தார்" என்று போர்க்கால நினைவுகளை மேஜர் ஜெனரல் சிங் மீட்டெடுக்கிறார். மோதல் நடந்த இடங்களை சரியாக அடையாளம் காட்டினார்.

"துப்பாக்கி சூட்டில் கால்களை இழந்த கங்காராம் பிறகு மரணத்தை தழுவினார்".

அப்போது நடைபெற்ற தீவிரமான போரை நினைவுபடுத்தும் விதமாக, ஒரு வீட்டின் வாசலில் தோட்டாக்களினால் துளைக்கப்பட்ட துளைகளைக் கண்டோம்.

யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாங்கள் பயணித்தபோது வேறு யாருடைய உதவிகளையும் நாங்கள் பெறவில்லை, மேஜர் ஜெனரல் சிங்கின் அபாரமான ஞாபகசக்தியே போதுமானதாக இருந்தது.

பல்கலைக் கழக தரையிறக்க வியூகங்களைப் போலவே இந்திய இராணுவம் பொம்மைவெளியூடாக அல்லது முஸ்லிம் கல்லூரி வீதியூடாக தமது முன்னேற்றங்களை மேற்கொண்டிருந்தால் வீடுகளுக்குள் மக்களைப் பூட்டி வைத்திருப்பார்கள். உயிரிழப்புகள் பொருளாதார இழப்புகள் என்பனவும் ஏற்பட்டிருக்கும்பரச்சேரி வெளி சூரியவெளி பிரதேசம் வரை முன்னேறிய  இராணுவத்துக்கு நாவாந்துறை ஊடாக முன்னேறியிருந்தால் கோட்டை ஒரு கிலோமீட்டர் தான். அங்கு முற்றுகைக்குள் அகப்பட்டிருந்த இந்திய இராணுவத்தை விரைவாக மீட்டிருப்பார்கள்ஆனால் அவர்கள் முன்னேற முனைந்த பாதை வேறாக இருந்ததுமுஸ்லிம்களை காப்பாற்ற நாடிய் அல்லாஹ்  அன்று கடும் மழையைப் பொழிவித்தான். பிற்பகல் மதிய நேரத்துக்கு பின்னர் பொழியத் தொடங்கிய மழை இரவிரவாக பெய்து அதிகாலையில் தான் ஓய்ந்தது. மழை நீர் இந்திய இராணுவம் அமைத்த பதுங்கு குழிகளை எல்லாம் நனைத்து வெள்ளமாக்கி விட்டது. அவர்கள் மழையில் இருந்து ஒதுங்க கட்டிடங்கள் எதுவும் காக்கை ராத்தலில்  காணப் படாத காலம். தொடர்ந்து அராலிவரை கட்டிடங்கள் இல்லாததால் அவர்கள் பின்வாங்கி பல கிலோமீட்டர்கள் சென்று விட்டாட்கள். மீண்டும் அந்தப் பாதையால் முன்னேற வில்லை.

அடுத்த நாள் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் கரிய ஒக்டோபர்  நினைவுகள் தொடரும் ...


0 கருத்துரைகள்:

Post a Comment