October 21, 2020

நாட்டை அராஜகப்படுத்தும் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே 20 ஆவது திருத்தம்

நாட்டை அராஜகப்படுத்தும் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்திற்கு கிடைத்த மக்கள் ஆணையில் ஜனாதிபதியை பலப்படுத்தும் விருப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அதனால் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தும் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நாட்டை அராஜகப்படுத்தும் 19ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதாக தெரிவித்தார். 

20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து தற்போதுள்ள அரசிலமைப்பை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தயாரில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர், மக்கள் எதிர்பார்க்கும் தேசத்தை கட்டியெழுப்பும் புதிய அரசியலமைப்பொன்றை விரைந்து கொண்டு வருவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார். 

பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு. 

இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எமக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாகும். அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்றின் கீழ் இந்த கௌரவ சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னொரு இருப்பாராயின் அது உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவார். 

நான் இந்த பாராளுமன்றத்தில் 1970ஆம் ஆண்டு பதவியேற்றது சோல்பரி அரசியலமைப்பு திருத்தத்தின் கீழாகும். அது மகாராணிக்கும் பிரித்தானிய மகுடத்திற்கும் ஆதரவாக.அதன் பின்னர் பிரித்தானியாவிலிருந்து விலகி முழுமையான குடியரசாக மாறிய குடியரசு அரசியலமைப்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழ் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது. 

அடுத்ததாக 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜயவர்தனவினால் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. அன்று இருந்த குடியரசு அரசியலமைப்பை நீக்கி ஜே.ஆர்.ஜயவர்தன 1978ஆம் ஆண்டு இன்று நாம் ஆளப்படுகின்ற புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார். 

இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து எமக்கு பாராளுமன்றத்தில் இருக்க இடமளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் இந்த அரசியலமைப்பிற்கு எதிராக முதலாவதாக எனது கையும் உயர்ந்திருக்கக்கூடும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு காரணம் இந்த அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

இந்த அரசியலமைப்பு போன்று விமர்சனங்களுக்கு உள்ளான அரசியலமைப்பொன்று இல்லை. 

இந்த அரசியலமைப்பிற்கு முதலாவதாக எதிர்ப்பை வெளியிட்ட கலாநிதி என்.எம், கொல்வின், சரத் முத்தெடுவேகம போன்றோர் இன்று உயிருடன் இல்லை. எனினும் இன்னும் இந்த அரசியலமைப்பை கொண்டு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. 

அதனால் நாம் இந்த அரசியலமைப்பின் கீழ் அரசியல் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். ஆனால் எமக்கு இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போயுள்ளது. அவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போனமைக்கு காரணம் ஒரு கட்சிக்கு இந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையே ஆகும். 

அதுமாத்திரமன்றி, இந்த சுயாதீன என்று கூறப்படும் கணக்காய்வு ஆணைக்குழு எந்தவொரு ஆணையத்தின் நடவடிக்கைகளையும் கணக்காய்வு செய்யவில்லை. 

ஜனாதிபதி மாளிகை அல்லது அலரி மாளிகையில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா? 

இந்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டதா? இந்த ஆணைக்குழுக்களினால் பொதுமக்கள் அதிகாரத்தை சுயாதீனமாக செயற்படுத்த அனுமதிக்கப்பட்டதா? அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்கள். அவர்கள் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறுபவர்களா? 19 வது திருத்தத்திற்கு இணங்க செயற்படுவதாயின் வாக்களித்து மக்கள் ஏன் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தேர்வு செய்கிறார்கள்? 

20ஆவது திருத்தத்தை நாம் கொண்டுவருவது இந்த மோசடி மிகுந்த 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே. அரசாங்கமொன்றை கொண்டு இயங்க மூன்றில் இரண்டு அவசியமில்லை. 115 வாக்குகள் இருப்பின் அரசாங்கமொன்றை கொண்டு செல்ல முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஏன் மூன்றில் இரண்மை கோரியிருந்தோம்? இந்நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க. தேசிய பாதுகாப்பை பாதுகாக்க. மீண்டும் அன்று காணப்பட்ட மரண அச்சம் இன்றி வாழக் கூடிய நாட்டை உருவாக்க. 

இந்த பொது தேர்தலில் மாத்திரமின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலும் இந்த சபையில் தாக்கம் செலுத்தும். இவ்விரு தேர்தல்களின் மூலம் மக்கள் 19 ஐ நீக்குவதனையே எதிர்பார்க்கின்றனர் என்பது புலப்பட்டுள்ளது. நாட்டின் ஐக்கியம் ஜனாதிபதியின் மூலமே வெளிப்படும். ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு சட்டத்தின் கீழ் ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்த மக்கள் விரும்புகிறார்கள். அப்படியானால், இந்த சபை ஜனாதிபதியின் ஆணை குறித்தும் சிந்திக்க வேண்டும். எனவே, 20 ஐ கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டை அராஜகப்படுத்தும் 19 ஐ தோற்கடிக்கப்படும்.

2 கருத்துரைகள்:

What NONSENSE is this man talking?

1. If the 1978 Constitution was bad, what did he do to do away with it
during his Presidency which began in Nov. 2005 and lasted till 2016?

2. He claims that the people gave the Mandate to do away with the 19A
in the 2019 Presidential Election and in the 2020 Parliamentary
Election. Was the 20A placed before the people in the 2019 and 2020
Elections? When that was NOT the case, how can he claim that the
people gave the Mandate for 20A.

3. He claims that he would have objected to the 1978 Constitution if he
was in Parliament when it was introduced. It is the 1978
Constitution that introduced the Presidential form of government. If
the Presidential system is so bad, why is he so fervently supporting
20A which gives the President much more powers than before?

3. He is very Critical of the Auditor General's Office and claims that
it did NOT do any Audit and was a total Failure. When did he come to
realise this? The Auditor General's Office was created more than 200
years ago 1n 1799, though called under different names, And he
himself appointed 2 Auditor Generals in 2007 and in 2010. Is it Only
now he has come to know that the Auditor General has NOT done any
work?

4. He also claims that he could not do anything to change the
Constitution as there was NO 2/3rd majority before. Now that he has
got it, will he totally do away the Presidential Form of Governance
which undermines the Independence of the Legislature and Judiciary?

The comment I posted at 07.45am today is yet to be published. I repeat it below.

Quote

What NONSENSE is this man talking?

1. If the 1978 Constitution was bad what did he do to do away with it
during his Presidency which began in Nov. 2005 and continued till
2015?

2. He claims that the people gave the Mandate to do away with the 19A
in the 2019 Presidential Election and in the 2020 Parliamentary
Election. Was the 20A placed before the people in the 2019 and 2020
Elections? When that was NOT the case, how can he claim that the
people gave the Mandate for 20A?

3. He claims that he would have objected to the 1978 Constitution if he
was in Parliament when it was introduced. It is the 1978
Constitution that introduced the Presidential form of government. If
the Presidential system is so bad, why is he so fervently supporting
20A which gives the President much more powers than before?

3. He is very Critical of the Auditor General's Office and claims that
it did NOT do any Audit and was a total Failure. When did he come to
realise this? The Auditor General's Office was created more than 200
years ago 1n 1799, though called under different names. He
himself appointed 2 Auditor Generals in 2007 and in 2010. Is it Only
now he has come to know that the Auditor General has NOT done any
work?

4. He also claims that he could not do anything to change the
Constitution as there was NO 2/3rd majority before. Now that he has
got it, will he totally do away the Presidential Form of Governance
which undermines the Independence of the Legislature and Judiciary?
Unquote

Post a Comment