Header Ads



15 மாவட்டங்களில் கொரோனா தொடர்புகள் குறித்து தீவிர ஆராய்வு


(எம்.மனோசித்ரா)

கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தற்போது வரை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

மினுவாங்கொட, திவுலப்பிட்டி, வெயாங்கொட என்பவற்றோடு கம்பஹா பொலிஸ் பிரிவிற்கும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர். முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 832 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதே வேளை அம்பாறை , அநுராபுரம் , பதுளை, கம்பஹா, அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம், கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், வவுனியா ஆகிய பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் குறித்த ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிவதால் அவற்றுடனான தொடர்புகள் குறித்து ஆராயப்படுவதாகவும் வெவ்வேறு பிரதேசங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.


1 comment:

Powered by Blogger.