Header Ads



15 ஆண்டுகள் கோமாவில் இருக்கும், சவுதி இளவரசர்


சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற சவுதி இளவரசர் ஒருவர் தற்போது தனது கை விரல்களை உயர்த்தி தான் சுய நினைவுடன் இருப்பதை தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இளவரசர் அல் வலீத் பின் காலித் அல்-சவுத்திடம் பெண் ஒருவர் உரையாடிய நிலையில் அவர் தனது விரல்களை உயர்த்தியுள்ளார். “ஹாய், திதி ஹலோ, ஹலோ என்னை பாருங்கள்.” என அந்த பெண் பேசும்போது இளவரசர் விரல்களை அசைக்கிறார்.

“இன்னும், இன்னும்” என அந்த பெண் மீண்டும் குரலெழுப்ப இளவரசர் தனது முழு கையையும் சிறிதளவு உயர்த்துகிறார்.

சமூக வலைத்தளத்தில் குறிப்பாக டிவிட்டரில் வெளியான இந்த காட்சிகள் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் அதிகமான முறைகளில் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை மற்றொரு இளவரசர், நவுரா பிண்ட் தலால் அல்-சவுத் அவர்களால் பகிரப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் இளவரசர் அல் வலீத் கோமா நிலையில் உள்ளார், அவர் இராணுவக் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட கார் விபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இவர் கடந்த 15 ஆண்டு காலமாக தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டது.

கோடீஸ்வரர் வணிக அதிபர் இளவரசர் அல்-வலீத் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல்-சவுத்தின் சகோதரரான இளவரசனின் தந்தை, ஒரு நாள் தனது மகன் முழு குணமடைவான் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.