இந்நாட்டின் முதலாவது பெண் பிரதி காவல் துறை மா அதிபராக நியமனம் பெற்ற பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சிக்கு எதிராக சிரேஷ்ட்ட காவல் துறை அதிகாரிகள் 14 பேர் பதில் காவல் துறை மா அதிபருக்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
காவல்துறை சேவையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையில் பெண்களுக்கு கிடைக்காத சிரேஷ்ட்ட காவல்துறை உத்தியோகத்தர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை பதில் காவல் துறை மா அதிபர் காவல் துறை ஆணைக்குழுவின் பொறுப்பிற்கு கையளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment