Header Ads



ஒன்றரை மாதங்கள் கடந்தும், தேசியப் பட்டியலுக்கு ஆளை நியமிக்காத UNP - 5 பேர் கடும் போட்டி


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்கவுக்கு வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்த தேசிய பட்டியல் வேட்பாளர்களில் ஜோன் அமரதுங்கவின் பெயரை முதலில் உள்ளது.


பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எவரையும் நியமிக்கவில்லை.


இந்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 5 வேட்பாளர்கள், ரணில் விக்ரமசிங்கவிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்திருந்ததாக அந்த கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.


எனினும் இந்த கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு, தேசிய பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருக்கு சந்தர்ப்பத்தை வழங்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

No comments

Powered by Blogger.