Header Ads



SLMC எம்.பி. க்கள் பல்டி, அடிக்க மாட்டார்கள் - ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய முயல்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் நிராகரித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் தனக்கு தெளிவான பெரும்பான்மையுள்ளது என்பதை காண்பிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியே இந்த தகவல்கள் வெளியாகின்றமைக்கு காரணம் எனஅவர் தெரிவித்துள்ளார்.


கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவார்கள் கட்சி ஆதரவாளர்களின் நோக்கங்களை அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


என்னால் முழு எதிர்கட்சியின் சார்பிலும் கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள ஹக்கீம் தனது கட்சி சவாலை எதிர்கொள்ள முன்வரும் எனவும் தெரிவித்துள்ளார்.


மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


6 comments:

  1. பல்டி அடிக்கமாட்டார்கள் என்பதை விட, பல்டி அடித்தால் முஸ்லிகளிடம் இருக்கும் கொஞ்சம் மரியாதை கூட இல்லாமல் போய் விடும் என்பது தான் பொருந்தும்.

    ReplyDelete
  2. What matters is Action, NOT Words. In a few days we will know whether your words are Matched by Action. We will wait and see.

    ReplyDelete
  3. MR.HAKEEM-YOUR COMMUNITY PEOPLE ARE BORN "THOPI PRADIES"THIS IS WHAT YOU ALL ARE DOING FROM KALMUNAI KARIAPPAR DAYS.YOU MAY BE STRONG IN YOUR POLICY BUT WATCH OUT FOR GUYS LIKE NAZEER AHAMED AND HAARIS.

    ReplyDelete
  4. May be he was not offered any full minister post.

    ReplyDelete
  5. அரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர், இன்ஷா அல்லாஹ். ஒன்றுக்கு மேற்பட்ட எஸ்.எல்.எம்.சி (SLMC) எம்.பி.க்கள் 20 வது, திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை இந்த ரவூப் ஹக்கீம் அறிவார். ஆனால் அவர் முஸ்லீம் வாக்காளர்களையும் சமூகத்தையும் ஏமாற்றுவதற்காக ஒரு "ஏமாற்றும் அரசியல் நாடகத்தை” அவர் செய்கிறார்
    இதைச் செய்வதன் மூலம், 20 வது, திருத்த மசோதாவை ஆதரிக்க ஒரு கட்சியாக அரசாங்கம் எஸ்.எல்.எம்.சியை (SLMC) அழைக்கும் என்று ரவூப் ஹக்கீம் நம்பலாம். பின்னர் அவர் தனக்கும் அவரது கைக்கூலிகளுக்கும் கூடுதல் நன்மைகளை கோரலாம். இந்த முனாஃபிக் முஸ்லீம் அரசியல் தலைவரிடமிருந்து கோதபயாவும் மஹிந்தாவும் கசப்பான பாடம் கற்றுக் கொண்டுள்ளனர். இனி அவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
    முஸ்லிம் சமூகத்திற்கு மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், முஸ்லீம் எம்.பி.க்களும் 20 க்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இது முஸ்லீம் அரசியல் ஆர்வம் சமூகத்திற்கு செய்யக்கூடிய சிறந்த அரசியல் தந்திரமாக இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் பெறும். சில தமிழ் எம்.பி.க்களும் ஆதரவாக களத்தில் இறங்குவார்கள் என்று கூறினார். நாங்கள் தோல்வியுற்றால், எஸ்.எல்.எம்.சி (SLMC) மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் காரணமாக முஸ்லீம்களாகிய நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவோம்.
    Noor Nizam – Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  6. அதை உன் ஒனர் ஹாபீஸ் நசீர சொல்லச் சொல்லுய்யா...!

    ReplyDelete

Powered by Blogger.