Header Ads



அதாவின் ஆடையும், மூத்த ஊடகவியலாளர் Naushad Mohideen இன் விளக்கமும்...!!


நேற்று -22- முதல் வைரலாகிக் கொண்டிருக்ககும் மேற்படி விஷயத்திற்கு மிகவும் சரியானதொரு விளக்கத்தை மூத்த ஊடகவியலாளரும், பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கறிந்த அரசியல் விமர்சகருமான Naushad Mohideen மிக நாகரீகமான முறையில்  இட்டிருக்கும் பின்னூட்டல் ஒன்று தருகிறது.  


அது,


 "" பாராளுமன்ற நிலையில் கட்டளையில் இவ்வாறு ஆடை அணியக் கூடாது என்று சொல்லப்படவில்லை. ஆனால் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது மிகத் தெளிவாக செல்லப்பட்டுள்ளது. அதைதான் காலாகாலமாக  உறுப்பினர்கள் பின்பற்றுகின்றனர் அது தான் பாராளுமன்ற சம்பிரதாயம். 


அதா உல்லா ஒரு அனுபவசாலி. ஒரு கட்சித் தலைவர். சபா மண்டபத்துக்குள் அவர் சம்பிரதாயத்தை மீறியது முற்றிலும் தவறானது. மேலும் நீங்கள் குறிப்பிட்டது  போல் மைத்ரி மோடி ஆடை அணிந்தது சபைக்கு வெளியே. அது அவருக்குள்ள சுதந்திரம். 


தேர்தல் பிரசார காலங்களிலும்  சபைக்கு அதாவது பாராளுமன்றத்துக்கு வெளியே முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அதாஉல்லாவின் ஆடையை சுட்டிக்காட்டியவர்கள் எல்லோரும் நிலையியல் கட்டளையின் அடிப்படையில்  அதை எதிர்த்தார்களே தவிர வேறு நோக்கம் எதுவும் அவர்களிடம் இருந்ததாகத்  தெரியவில்லை. 


இதை புரிந்து கொண்டதால்தான் அதாஉல்லாவும் அமைதியாக சபையில் இருந்து தானாகவே வெளியேறினார். ஏதோ மறதியாக உள்ளே வந்திருக்க வேண்டும். Otherwise he is a fighting cock and he knows how to fight back .தேவையின்றி எல்லாவற்றையும் குறுகிய இனவாத கண்ணாடி ஊடாகப் பார்ப்பது இன்று நம்மிடத்தில் ஒரு மன நோயாக மாறி வருவது கவலைக்குரியது "

5 comments:

  1. சம்பவம் தொடர்பாக மதிப்புக்குரிய அதாவுல்லா அவர்கள் கருத்தை அறிந்து வெளியிடுங்கள். ஏனெனில் அவர் கருத்துதான் சரியாக இருக்கும். நாங்கள் ஆளாளுக்கு ஊகங்களின் அடிப்பையில் பேசுவது பிழையான முன்னுதாரணமாகும். சம்பவம் தொடர்பாக அதாவுல்லா அவர்கள் நிலைபாட்டை நான் ஆதரிப்பேன்.

    ReplyDelete
  2. " மற்றையவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை "என்ற அடிப்படையில் மூத்த ஊடகவியலாளர் நௌசாத் மொகிடீன் அவர்களது ஆற்றல் ? தொடர்பாக ..,.
    மனிட உள்ளங்களை துல்லியமாக அறியும் ஆற்றல் படைத்த இறைவன் அல்லாஹுவை தவிர யாருக்கும் இல்லை என்பதே முடிவானது.
    ஆனால் உளவியல் நடத்தைகளைக் கொண்டு அனுமானம் செய்கிறது.

    ReplyDelete
  3. Sir: இவை எல்லாம் பெரிய பெரிய விடயங்கள் இல்லை. எவ்வளவோ பெரும் பெரும் விடயங்கள் இருக்கின்றன. பாராளுமன்றம் விளையாடுவதற்காகச் சென்ற மைதானம் அல்ல. இதனை சகல உறுப்பினர்களும் நன்கு உணர்ந்து நாட்டில் ஜனநாயகமும் மன்றில் ஜனநாயக மாண்புமிக்க எதிர்க்கட்சியும் தம் பணிகளைச் செய்ய சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  4. எப்படி ஆடை அணிய வேண்டும் என்று சொன்னால் நாமும் அதை அறிந்து கொள்ளலாமே.

    ReplyDelete
  5. "Ithellaam periya vidayamaaha edukka thevayillai " enra adippadayil,
    Makkalukkaha sevai seivathatkaahave, oru M.P. paaralumanratthitku anuppappaduhiraar enra adippadayil, anuphavamulla entha m.p. yum nadavadikkaihalai amaithukkondaal, Sari.
    Samoohaththukku pirayosanam alikkum.
    Iraivan anaiththukkum pothumanavan.

    ReplyDelete

Powered by Blogger.