Header Ads



மாடறுப்பு தடை என்பது, முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் – இம்ரான் Mp


மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இலங்கையில் மாடுகளை அறுக்க தடை விதிக்க வேண்டும் என ஆளும் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழச்சி நிரலின்படி செயல்படும் இந்த அரசு கொண்டுவர எதிர்பார்த்துள்ள இந்த சட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்காலங்களில் இதைவிட பாரிய இனவாத செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சர்வாதிகாரத்தை பெறவே இப்பொழுது இருபதாம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவுள்ளனர். ஆகவே இவற்றை  எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் சிறுபான்மையினர் தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.  

இச்சந்தர்பத்தில் என்னில் எழும் கேள்விதான் இவ்வாறான சந்தர்பங்களில் அரசுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படபோகிறார்கள்? சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ள சந்தர்பங்களில் இவர்கள் தமது சமூகத்தின் உரிமைகளுக்காக பேசுவார்களா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் மாடறுப்பு தடை செய்வதென்பது இயற்கை சமநிலையை குழப்பும் செயற்பாடாகும். விரிவாக சொல்லவேண்டுமானால் இயற்கையான உணவுச்சங்கிலியை குழப்பும் செயற்பாடாகும். மாடறுப்பு தடை செய்யப்படுவதனால் பால்தராத மாடுகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டு அவை கவனிப்பாரற்று தெருக்களில் சுற்றித்திரியும் நிலை உருவாகும் இதனால் ஏற்படவுள்ள சமூக பொருளாதார சிக்கல்களுக்கு இந்த அரசு முன்வைக்கவுள்ள தீர்வு என்ன?

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்கவேண்டும் என கூறும் இந்த அரசு மாடறுப்பு தடையாலும் இறைச்சி இறக்குமதியாலும் பாதிப்படையவுள்ள உள்நாட்டு பண்ணையாளர்களுக்கு வழங்கவுள்ள தீர்வு என்ன?

இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமே என நினைத்தால் அது அரசின் அறியாமை. மாடிறைச்சி, பண்ணை தொழில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூவின மக்களும் சம்மந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரினதும் பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும். 

இந்த சட்டமூலத்தால் எமது நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் பற்றி அரசு அறியாமலில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சிநிரலின்படி இந்த அரசு செயற்படுவதால் அவர்களுக்கு இந்த பாதிப்புக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லை என தெரிவித்தார்


6 comments:

  1. மாடறுப்பு தடை பிரேரனை நமது தூர சிந்தனைகளை ஓரம் கட்டிவிட்டது.

    இனி எந்த சட்டமூலத்தை திருத்தினாலும் பறவாஇல்லை என்ற நிலையை அது உருவாக்கிவிட்டிருக்கிறது.

    இனி திட்டமிடப்பட்ட திருத்தங்களும் மாற்றங்களும் வெகுவாக நடந்து முடியும். அதுவரை மாடறப்பு தடைதான் நமக்கு கிடைத்த தலைப்பு.

    நமது வாத பிரதி வாதங்களும் மும்முரமான விமர்சனங்களும் முகப்புத்தக பதிவுகளும் இனி அதுபற்றியதாகவே இருக்கும்.

    மாடறுத்தல், மாட்டிறைச்சி உண்ணல் என்பது முஸ்லிம்களின் மார்க்க கடமைகளில் ஒன்றோ என்று மாற்று மதத்தவர்கள் எண்ணுமளவுக்கு எழுத்து வீரர்களின் வீர வசனங்கள் முகப்புத்தகங்களில் முதலிடம் பிடித்து வருவது கவலையளிக்கும் விடையம்.

    மாடறப்புத் தடை என்பது நமக்கானது என்று உரிமை கொண்டாடி, நமது பக்கம் இழுத்துப்போட்டுக் கொள்ள நமக்கெண்ண அவசியம் இருக்கிறது.

    நமது இஸ்லாம் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத பொருத்தமான சட்டங்களை கொண்டது.

    எனவே புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் உழ்ஹிய்யா கொடுக்க மாடுகளை மட்டுமே அறுக்க வேண்டும் என்று சட்டமில்லை. ஆடும் கொடுக்கலாம். ஆகவே நாம் அமைதியாக இருப்போம். சட்டத்தை கொண்டுவந்தவர்களே அதனை இரத்தும் செய்யும் காலம் தொலைவில் இல்லை.

    ஏனெனில் இதன் எதிர் விளைவுகள் எவ்வளவு ஏராளமானது என்பதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

    மரக்கறிகளின் விலைவாசி தாறுமாறாக ஏற்றமடையும்.

    ஆட்டிறைச்சியின் விலை அளவுகடந்து செல்லும்.

    மீனின் விலை அதிகரிக்கும்.

    மாடுகளின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் போகும்.

    மாடு வளர்ப்பது பயனற்றது என உணரப்படும் போது மாடுகள் கட்டாக்காலிகாக விடப்படும். அதனால் வீதி விபத்துக்கள் அதிகரிக்கும்.

    காட்டு மாடுகள் அதிகரிக்கும். அதனால் மேய்ச்சல் நிலங்கள் குறைவடையும் போது புல் உண்ணும் மற்றைய விலங்குகள் பாதிப்படையும்.

    இறைச்சிக்கடைகளால் கிடைக்கப்பெற்றுவந்த பல இலச்சங்கள் இல்லாமல் போகும்.

    பெருமளவான பண்ணையாளர்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதிலும் பாதிப்பு அவர்களுக்கே அதிகம் இருக்கும்.

    ஆகவே இதன் மூலம் முஸ்லிம்களாகிய நாங்கள் பாதிக்கப்படுவதை விட நாட்டின் பொருளாதாரமே நலிவடையும். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஹாறூன் (ஸஹ்வி)

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் இம்ரான்!

    இது இந்திய / சீனாவின் நிகழ்ச்சி நிரல்களின்படி நடக்கவிருக்கின்ற முஸ்லிம்களுக்கெதிரான அநியாயங்கள் தொடக்கமே!

    ஏற்கனவே பசில் ராஜபக்ஷ "பொதுஜன பெறமுண" கட்சி இந்தியாவின் பிஜேபி போல் சீனாவின் சீசீபி போல் உலகில் மிக சிறந்த கொள்கையுடையதாக இருக்கும்" ஆரூடம் கூறியிருந்தார். அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.... அள்ளாஹ்வும் சூழ்ச்சி செய்வதாக வாக்களித்துள்ளான். பொறுமை காக்கவேண்டிய இடத்தில் பொறுமை காப்போம், கொதிக்கவேண்டிய இடத்தில் கொதிப்போம். முதலில் பொறுமை காப்பதும் அள்ளாஹ்வை அணுகுவதுமே மிக சிறந்தது!

    ReplyDelete
  3. Mr Imran it is not a issue for muslim .dont give any statment all muslim parliment members talk about too many bar inthe buddhist country.
    Too many prostitute in every district.
    Schools hospital govt offices no any develops we should speak this things only.it will benefit to other community.

    ReplyDelete
  4. அட எரும...
    மாடு அறூக்கிறதுக்கும் முஸ்லிமுக்கும் என்னடா சம்மந்தம்...

    ReplyDelete
  5. YAHAPALANA AATCHIYILUM, ITHRYPONRU
    MUDIVU EDUTHATHAI, IVVALAVU SHEEKKIRAMAKA, IMRAN MARANDUVITTATHU EIN??

    ReplyDelete
  6. மாடறுப்பை முஸ்லிம் உரிமையுடன் அநாவசியமாகத் தொடர்புபடுத்தி அசிங்கப்படுத்தாமல், அரசியல் செய்யத் தேவையான எத்தனையோ விடயங்கள் உள்ளன அவற்றைத் தேடுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.