Header Ads



அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி, இலங்கை இளைஞர் பலி


விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.


இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.