இலங்கைக்கு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் பிரதிநிதிகள் இன்று (02) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் இறக்குமதி தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்து இவ்வாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறக்குமதியை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு அமைய, மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு காரணமாக குறித்த தொழிலுடன் தொடர்புடைய சுமார் 2 இலட்சம் பேர் தமது தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து நாளைய தினத்தில் திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Post a comment