Header Ads



அன்புள்ள அலி சப்ரிக்கு, ஒரு திறந்த மடல்...!


மரபு ரீதியான நலன் விசாரிப்புகள், வாழ்த்துக்கள் எதுவுமின்றி எனது மடலை  வரைகிறேன். 

ஏனெனில் நீங்கள் மிகுந்த வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தான் இந்த மடலை படிக்க நேரிடும் என்பது எனக்குத்  தெரியும்..

இப்படியெல்லாம் மடல் வரைவது வழக்கொழிந்து விட்ட சமாச்சாரம் ஆச்சே..? என்று, முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள். 

எனது சமூகத்தின் ஆயிரம் ஆயிரம் கண்ணீர் கதைகளை கேட்டதன் பின்னரும், கற்பையும், கணவரையும் ஒருசேர  இழந்து, நீதிகூட மறுதலிக்கப்பட்டு, நடுத்தெருவில் விடப்பட்டுள்ள நமது சமூகத்து அப்பாவிப் பெண்களின் அழுகுரல்கள் நாளும் செவிப்புலன்களை சல்லடை போடும்போது, ஒரு கடிதத்தினூடாகவேனும்  நமது சமூகத்தின் உளக்குமுறல்களை  வெளிக்கொணராமல் என்னால்  எவ்வாறு இருக்க முடியும்?

மதிப்புமிக்க நிதியமைச்சர் அவர்களே!

தொன்று தொட்டு வழக்கில்  இருந்து வந்திருக்கின்ற இஸ்லாமிய தனியார் சட்டங்களில் "காதி நீதிமன்றங்கள்" என்பது மிக முக்கியமான ஒரு அம்சம்.

காதி நீதிமன்றங்கள் இஸ்லாமிய விவாக/விவாகரத்து குறித்ததான விசாரணைகளையே முன்னெடுத்துச் செல்கின்றன என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஒரு சட்டத்தரனியான தங்களுக்கு ஒரு நீதிபதியின் தகுதி, தராதரம் குறித்தெல்லாம் என்னைப் போன்ற ஒரு பாமரன் வகுப்பு எடுத்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. 

நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் ஒருபொறிமுறையின் அடிப்படையில் தானே நியமிக்கப்படுகின்றனர்? தகுதிகளும் தராதரங்களும் தானே அவர்களை நீதிமன்ற கதிரைகள் வரை அழைத்துச் செல்கின்றன.  அந்தத் தகுதிகளினடிப்படையில் தானே அவர்கள் நீதிபதிகளாக  நியமிக்கப்படுகின்றனர்?  அந்தப் பொறிமுறைகளும் தகுதி, தராதரங்கள் காதிநீதிமன்றக் கட்டமைப்பில் கடைபிடிக்கப்படாது ஏன்? என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கௌரவ நீதி அமைச்சர் அவர்களே! 

தகுதியோ தராதரமோ இல்லாமல், "தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரர்கள்" என்பது போல நினைத்தவர்கள் எல்லாம்  காதி நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமனம் பெறமுடியும் என்ற எழுதப்படாத விதியின் விளைவு தான், சமூகத்தை பாதாளத்தின் எல்லைவரை தள்ளிவிட்டிருக்கிறது.

ஒழுங்குபடுத்தப்பட்ட எந்தவிதமான விதிமுறைகளோ, சீரிய கட்டமைப்புகளோ இன்றி "லெப்பை இல்லாத பள்ளிக்கூடங்கள்" போன்று இயங்கி வருகின்றன காதி நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள், இஸ்லாமிய தம்பதியர்களிடையே ஏற்படுகின்றன ஒரு பிரச்சினையை ஒன்பது பிரச்சினைகளாக மாற்றிவிடுகின்றன. 

தனக்குத் துணையாக தனது இருபக்கங்களிலும் வைத்திருக்கும் ஆலிம்கள் என்ற "ஆசாமிகள்" நீதிமன்றை நாடி வரும் தம்பதியரது விலாசத்தை கேட்டுத் தெரிந்து கொண்டு, அவர்களது வீடுவறை சென்று நான்கு பணம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு எழுதும் அவலங்களையெல்லாம் கேட்க வேண்டுமெனில், நீதி வேண்டி காதி நீதிமன்றங்களை நாடிய ஒவ்வொரு பெண்களின்  வீட்டுக் கதவுகளை  தட்டுங்கள் அழுகுரோலோடு அந்த அவலக் குரல்களும் சேர்ந்தே ஒலிக்கும். 

மதிப்பு மிக்க  நீதி அமைச்சர் அவர்களே! 

நமது சமூகத்தின் அவலங்களுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் நமது ஒழுங்கின்றி இயங்கி வரும்  காதி நீதிமன்றங்களுக்கு பெரும் பங்கிருக்கின்றன  என்பது தான் கசப்பான உண்மை.

(அ)நீதித் தீர்ப்புகளால் சீரழிந்து, சின்னாபின்னமாகி ஒரு குடும்பம் நடுத்தெருவில் விடப்படுவதென்பது எவ்வளவு பெரிய சமூக சீரழிவுக்கு காரணமாக அமையும் என்பதை செல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. 

நிறைவாக! 

மதிப்புமிக்க நிதியமைச்சர் அவர்களே! இளவயது திருமணங்களை தடை செய்ய  அவசர அவசரமாக நீங்கள் இளவயது திருமணங்களுக்கு தடை விதிக்க தயாராகி வருவதாக அறியக் கிடைக்கிறது.

ஆனால் சமூகத்தின்  உடனடித் தேவையாக உள்ள காதி நீதிமன்ற கட்டமைப்பை மறுசீரமைத்து  வலுப்படுத்தினால் இந்த சமூகம் உங்களை என்றும் நன்றியோடு நினைவு கூரும்..

இது வெறும் ஒரு கடிதமல்ல, பாதிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனங்களின் தேங்கி நிற்கும் அவலங்களை கூறும் சில வரிகள்... 

அந்த அவலங்களின் கனதியையும், இக்கடிதத்தின் முழு நோக்கத்தையும் தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

இவன்

M.A MOHAMED. (AL- ALAVY)

KANAMPITIYA - GALLE,


7 comments:

  1. Dear Hon. Ali Shabri,
    I had relationship with a Kadhy in my past life and this letter is absolutely right.
    We believe in you. Kindly consider this letter.

    ReplyDelete
  2. இந்த சகோதரின் ஆதங்கம் மிகவும் உண்மையானது .காதிநீதிபதிகள் நியமிக்கும்போது அவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் .

    ReplyDelete
  3. எங்கு பார்த்தாலும் மஸாஜ் க்ளினிக் என்ற பெயரில் விபச்சார விடுதிகள் , internet இல் பாலியல் பக்கங்களை தேடுவதில் இலங்கைக்கு முதலிடம் , சிறுவர் துஷ்ப்பிரயோகத்தில் இலங்கை சாதனை, கட்பழிப்பு மற்றும் கொலையிலும் சாதனை, போதைப்பொருட்கள் இலங்கையில் இன்று அனைவர் கையிலும் கையடக்க தொலைபேசிபோல் ஆகிவிட்டது இவ்வளவு கேவழங்களும் படுவேகமாக அரங்கேறிக்கொண்டு இருக்கும் இவ்வேலையில் இனவாதிகள் கூச்சலிட்டார்கள் என்பதற்காகவும் ராஷபக்க்ஷவினரை திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் இளவயது திருமணத்தை பூதாகரமாக காட்டி அதனை ஒழிக்க வேண்டும் என்பதாக படுவேகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமைச்சருக்கு இது ஒன்றும் புறியப்போவதில்லை. இளவயதில் திருமணம் முடிக்க முடியும் என்பது சந்தர்ப்பத்துக்கேற்ற இறைவனுடைய சட்டமே தவிர இளவயதில் திருமணம் முடிக்க கட்டாயப்படுத்துவதற்கல்ல என்பதை அமைச்சர் விளங்க வேண்டும். மாறாக அந்த சட்டம் பிழை என்று அவர் கூறுவாராணால் அவர இறைவனை பயந்து கொள்ளட்டும் .

    ReplyDelete
  4. Allah may give the clear & pure understanding about Islam and its 10000000000000000%+ correct low for all humanity. Must know that the low in Islam not only for muslims...its all for humanity....by the creator

    ReplyDelete
  5. You are absolutely Right brother M.A.Mohamed. The Quadi Court System Needs Urgent Streamlining. In this Exercise, First Priority should be given to the Procedure in the Appointment of Quadis. Only Suitably Qualified (Not necessarily Lawyers), Mature and Honest persons who are conversant in Islamic Laws of Marriage and Divorce should be selected. They should also be provided Training and Guidance on the Application of Islamic Laws, Conducting the Hearing of Cases and Delivering Judgments. There should also be a system of Appeal where those not satisfied with Judgments can seek redress.

    If the Quadi Court System is properly Re-organised and Re-structured, it will certainly be a Great Service to the Suffering people and the Community at large, Insha Allah.

    ReplyDelete
  6. இறைவனுடைய சட்டங்கள உலக முடிவு வரையிலானது. அதில் எந்தப் பிழையினையும் எவரும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் மனிதர்களில் சிறப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களில்தான் மிகப் பெரிய பிழைகள் இருக்கின்றன. இந்த நாட்டை ஆட்சி புரிந்த எந்த அரசாஙகமும் இதுவரை முஸ்லிம்களின் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ பறிப்போம் என்று எங்கும் அடம் பிடித்ததில்லை. மாறாக எங்களுடை;ய சமூகமே அரசிடம் எங்களுக்குத் தரப்பட்டுள்ள உரிமைகளையும் சலுகைகளையும் பறித்து எடுங்கள் என்று அவரகளைக் கட்டாயப்படுத்தினால்; அவரகளை வலிந்து உசுப்பேற்றினால்; அவரகள் என்ன செய்வார்கள். இதுவரை காலமும் சிங்கள தமிழ் சமூகங்களில் நடைபெறாத விடயங்கள். அனைத்தும் முஸ்லிம் சமூகததில மாததிரம்தான் நடைபெறுகின்றன என்றால் அதற்கு என்ன காரணம். ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. "நீங்கள் எது வேண்டும் என்றாலும் செய்து கொளளுங்கள். நானும் எனது குடும்பமும் நல்லபடியாக வாழ்ந்தால் போதும். எங்களை விட்டு விடுங்கள் என்று எமது முஸ்லிம் "பெரியார்கள்" அரசிடம் மறைமுகமாகக் கூறுவதுதான். இது பத்திரிகைகளில் எழுதுவதுபோன்ற விடயம அல்ல. முஸலிம் பெண்களின் வாழ்வியல் பிரச்சினை. முஸலிம் பெண்களுக்கு காதி நீதிமன்றங்களால் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டது என்று கூறும் எங்களுல் எத்தனைபேர் இதுவரை மேலிடத்தில் சமூகரீதியில் முறையிட்டுள்ளோம். முஸ்லிம் பெண்களுக்கான கொடுமை இலங்கையின் எல்லாக் காதி நீதிமன்றங்களிலும் காலம் காலமாக நடாத்தப்பட்டு வருகினறமையை எவரும் ஏன் காதி நீதிபதிகளால்கூட மறுக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் போதிய தகுதியற்றவரகளை மிக முக்கியமாக மெளலவி என்பதற்காக காதி நீதிபதிகளாக நியமிப்பதுதான். அரசியல்வாதிகளால் சிபார்சு செய்யப்பட்டு இவ்வாறு அடிப்படைத் தகுதிகளும் இல்லாத பலர் இலங்கையின் காதிநீதிமன்ற முறைமையினையே சீரழித்துவிட்டனர். இதனைப் பாதிக்கப்பட்டவரகள் அவரகளின் உறவினரகள் அரசுக்குத் தெரிவித்தனரா என்றால் இல்லை என்றே பதில் வரும;. வேறு சில நாடுகளில் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் இல்லை. அங்கு எல்லாம் அவை ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. காதி நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு மிகவும் இன்றியமையாதது. முறையாக இவை சீர்திருத்தப்பட்டு அமைக்கப்படல் வேண்டும். காதிமார்களுக்கு உதவியாக அப்பிரதேச அல்லது பக்கத்துப் பிரதேசத்திலுள்ள நம்பிக்கையானவரகள் ஜூரிமார்களாக நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடாத்தப்படுமாக இருந்தால் இலங்கையில் காதி நீதிமன்ற நிர்வாகம் சிறப்படையும் என்பதுதான் என் போன்ற பாமரர்களின் எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete
  7. Will all these comments will reach him is doubtful at this time when he's busy with all other things in hand?

    ReplyDelete

Powered by Blogger.