Header Ads



ரணிலுடனும், கருவுடனும் திஸ்ஸ அத்தநாயக்கா பேச்சு


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான நெருக்கடிக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு திஸ்ஸ அத்தநாயக்க இதை குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதை நான் கடுமையாக எதிர்த்தேன். மேலும் ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்று குறிப்பிட்டார்.

மேலும், “நான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். இது உத்தியோகப்பூர்வ சந்திப்பு அல்ல. எனது விருப்பப்படி நேரில் நடந்த ஒரு கூட்டம்.

கரு ஜெயசூரியாவையும் சந்தித்தேன். இந்த நெருக்கடியை தீர்க்க நான் அவர்களிடம் பேசினேன். மீண்டும் யோசிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரைத்தேன்.

மக்கள் அளித்த தீர்ப்பை கருத்தில் கொண்டு இப்போது ஒரு முடிவுக்கு வருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். நான் ரணில் விக்ரமசிங்கவுடன் 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன் ஆனால் அவர் எப்போதும் பிரச்சினைகளிலிருந்து நழுவுகிறார் என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.