Header Ads



சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார்..?


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமையின் மூலம் தான் கடமை தவறியதாக தெரிவிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

நேற்று (15) மாலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கையில் அவர் இதனை கூறினார். 

மாறாக, பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸார், பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் சஹரான் ஹாசீமை கைது செய்யாமையே தாக்குதலுக்கு காரணம் எனவும் அவர் கூறினார். 

இவ்வாறு 8 இடங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்காமையின் மூலம் நீங்கள் கடமையை சரிவர நிறைவேற்ற வில்லை என உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே? என அரச மேலதிக சொலி சிட்டர் நாயகம் அவரிடம் வினவினார். 

அதற்கு பதிலளித்த மெண்டிஸ், ´இல்லை´ நான் கடமை தவறியதாக நினைக்கவில்லை. பொறுப்பானவர்கள் சஹரான் ஹாசீமை கைது செய்யாமையே இதற்கு காரணம்´ என கூறினார். 

பொறுப்பானவர்கள் யார்? என ஆணைக்குழு தலைவர் அவரிடம் வினவினார். 

பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸார், பயங்கரவாதம் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் ஆகியோர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் என கூறினார். 

1 comment:

Powered by Blogger.