Header Ads



மரண தண்டனை கைதி பிரேம்லால், பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்கிறார் சபாநாயகர்


மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜெயசேகர பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

“இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றமும் நீதிமன்றமுமே முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் நெவில் இடவெல, இவ்விடயத்தில் பாராளுமன்றத்துக்கும் முக்கியமான ஒரு பங்குள்ளது எனத் தெரிவித்திருக்கின்றார்.

“பிரேம்லால் ஜெயசேகரா பாராளுமன்றத்துக்கு ஒரு எம்.பி. ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான வர்த்தமதனி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது என்பதையிட்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். அதனால், அவர் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றம் அதன் கடமையைச் செய்துள்ளது. இப்போது, அவரை விடுதலை செய்யலாமா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்” எனவும் நெவில் இடவெல தெரிவித்தார்.

இந்த விவகாரம் தமது கைகளில் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார். “எமது வேலையை நாம் செய்து முடித்துவிட்டோம். தேர்தலை நடத்தி முடிவுகளை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளோம். இதற்குமேல் பிரேமலால் ஜெயசேகர விடயத்தில் என்ன செய்வது என்பதை பாராளுமன்றமும் நீதிமன்றமுமே முடிவு செய்ய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரைப் பாராளுமன்றம் செல்ல அனுமதிப்பது ஓர் பிழையான முன்னுதாரணமாகவே இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.