Header Ads



திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத உறுப்பினரை நினைவுகூர்வதாக அமையும் - நீதவான் பீற்றர் அறிவிப்பு


திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள் மனுவை யாழ். நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நிராகரித்தார்.


திலீபனின் நினைவேந்தலிற்கு தடைகோரி யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நினைவேந்தலிற்கு யாழ். நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.


இந்த நிலையில், இன்று திருத்த மனு சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகினர்.



விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம். திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமையும்.


அகவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்வதை மன்று தடை செய்கிறது என சற்று முன்னர் தீர்ப்பளித்தார்.


No comments

Powered by Blogger.