Header Ads



முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ, அரசுடன் பேசத் தயார் : நசீர் அஹமட்


(ஆர்.ராம்)

முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய தேசிய அரசியல் களம் மிகவும் மாறுபட்டதாக உள்ளது. அதனை நாம் சரியாக கையாள வேண்டிய நிலையில் உள்ளோம். அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில் எமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் மிகவும் முக்கிய விடயமாகின்றது.

ஆகவே அந்த விடயங்கள் தொடர்பாக நாம் யாருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் தற்போதுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

அதேநேரம், அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு எமது ஆதரவினையும் தெரிவிப்பததோடு எமது சமூகத்திற்கு பாதகமான விடயங்களை எதிர்ப்பதற்கு பின்னிற்கவும் போவதில்லை. ஜனநாயக கட்டமைப்பான எமது கட்சியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படலாம்.

ஆனால் எமக்கு ஆணை வழங்கும் மக்களின் நிலைப்பாடுகள், கட்சியின் பெரும்பான்மை அங்கீகார தீர்மானங்களுக்கு அமைவாகவே அனைத்து செயற்பாடுகளையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என்றார்.

10 comments:

  1. இவருக்கு அமைச்சர் பதவி இல்லாமல் இருக்கவே முடியாது போல. இவனுக்கு தேவையான பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்களின் அபிலாசைகள் எனும் போர்வையை போத்திக்கொள்ள பார்க்கிறான். இந்த துவேஷ அரசு முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எந்த ஒரு பெருமானங்களும் கொடுக்காமல் இன்றுவரை எமது ஜனாசாக்களை எரியூட்டிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அரசுடன் பேசி முஸ்லிம்களின் அபிலாசைகளை இவன் வென்றடுக்கப்போகிறானாம், இவன் இவனுக்கு அவசியப்படும் பதவியை வேண்டுமானால் வென்றடுத்துக்கொள்வான் மற்றும் படி முஸ்லிம்களுக்கு எந்தவொரு நலவும் இவ்வரசால் நிகழப்போவது இல்லை.

    ReplyDelete
  2. இவருக்கு அமைச்சர் பதவி இல்லாமல் இருக்கவே முடியாது போல. இவனுக்கு தேவையான பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்களின் அபிலாசைகள் எனும் போர்வையை போத்திக்கொள்ள பார்க்கிறான். இந்த துவேஷ அரசு முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எந்த ஒரு பெருமானங்களும் கொடுக்காமல் இன்றுவரை எமது ஜனாசாக்களை எரியூட்டிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அரசுடன் பேசி முஸ்லிம்களின் அபிலாசைகளை இவன் வென்றடுக்கப்போகிறானாம், இவன் இவனுக்கு அவசியப்படும் பதவியை வேண்டுமானால் வென்றடுத்துக்கொள்வான் மற்றும் படி முஸ்லிம்களுக்கு எந்தவொரு நலவும் இவ்வரசால் நிகழப்போவது இல்லை.

    ReplyDelete
  3. இவருக்கு அமைச்சர் பதவி இல்லாமல் இருக்கவே முடியாது போல. இவனுக்கு தேவையான பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்களின் அபிலாசைகள் எனும் போர்வையை போத்திக்கொள்ள பார்க்கிறான். இந்த துவேஷ அரசு முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எந்த ஒரு பெருமானங்களும் கொடுக்காமல் இன்றுவரை எமது ஜனாசாக்களை எரியூட்டிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அரசுடன் பேசி முஸ்லிம்களின் அபிலாசைகளை இவன் வென்றடுக்கப்போகிறானாம், இவன் இவனுக்கு அவசியப்படும் பதவியை வேண்டுமானால் வென்றடுத்துக்கொள்வான் மற்றும் படி முஸ்லிம்களுக்கு எந்தவொரு நலவும் இவ்வரசால் நிகழப்போவது இல்லை.

    ReplyDelete
  4. நீங்க ஆணியே புடுங்க வேணாம்.

    ReplyDelete
  5. நீங்களும் ஹரீஸும் ஏதேனும் காரணம் கூறி பெல்டி அடிப்பீர்கள் என்று எங்களுக்கு எப்பவோ தெரியும்.நீங்க இருவரும் ஏற்கனவே மஹிந்தவிடம் போய் வந்தவர்கள் தானே.சும்மா பொய்க்கு முஸ்லிம் சமூகத்துக்காக ஆதரவு என்று கூறாதீர்கள்.

    ReplyDelete
  6. நீ போய் யாரோடும் சேர்ந்து உழைக்கப் பார்.தயவுசெய்து முஸ்லிம்கள் என்ற பெயரை சொல்லி முஸ்லிம்களை கொச்சைப்படுத்தாதே.

    ReplyDelete
  7. இவர்களைப் போன்றவர்களால் தான் இந்த நாட்டில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே தலை குனிந்து நிற்கிறது.

    ReplyDelete
  8. Shameless LIAR. Can you Mention just One instance of the SLMC doing any good to the Muslim Community since the SLMC Founder Leader Ashroff passed away? You guys are there ONLY to look after your Personal Benefits and Interests and you think of the Community ONLY during Election time. What Disgraceful Fellows you All are.

    ReplyDelete
  9. முஸ்லீம் குரலின் கன்வீனர் தனது கருத்துக்களில் பல முறை கூறியது, எஸ்.எல்.எம்.சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட சுயநல நலன்களுக்காக இதைச் செய்வார்கள் என்று. அதே நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களின் பொது நலனுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் முஸ்லிம் வாக்காளர்களுக்குச் சொல்லுவார்கள்.
    அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள்ளர? நமது வாக்களிக்கும் குடும்பத்தில் (muslim vote bank) மாற்றம் தேவை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். எஸ்.எல்.பி.பி கட்சியில் போட்டியிடும் புதிய முஸ்லீம் இளம் அரசியல் ஆர்வலர்களுக்கு வாக்களிப்பது மற்றும் முஸ்லீம் அபிலாஷைகளின் நன்மைக்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு
    வழங்குவது நல்லது. ஒரு புதிய அரசியல் சக்தி விரைவில் முஸ்லிம் சமூகத்தில் வளர வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  10. இது பற்றி பல முறை எழுதிய போதும் ஜ.மு அதை பிரசுரிக்காது கள்ளத்தனமாக தவிர்ந்து கொண்டது.

    ReplyDelete

Powered by Blogger.