Header Ads



ரத்மலான ரோஹாவிற்கு, நிகழ்வு எதனையும் செய்யக் கூடாது! பொலிஸார் கடும் எச்சரிக்கை


ரத்மலானே ரோஹாவின் மறைவை முன்னிட்டு ஏதேனும் நிகழ்வுகளை முன்னெடுப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.


திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரோஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று கொல்லப்பட்டார்.


நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலானே ரோஹா உயிரிழந்தார்.


ரத்மலானே ரோஹாவை கைது செய்ய பொலிஸார் முற்பட்டவேளை, அவர் பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.


இதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 லட்சம் இந்திய ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.


அத்துடன், குறித்த நபர் பலவேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.