Header Ads



கண்டியில் நில நடுக்கம், ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது



(எம்.மனோசித்ரா)

கண்டியில் கடந்த 29 ஆம் திகதி காலை 8.32 மணியளவிலும் இன்று -02- காலை 7.06 மணியளவிலும் பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் ஏற்பட்ட நில அதிர்வு பல்லேகல நிலஅதிர்வு கண்காணப்பு மத்திய நிலையத்தில் சிறியளவிலான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது.

இவை தவிர இந்த நில அதிர்வானது மஹகந்தராவ கண்காணிப்பு மத்திய நிலையத்திலும் கம்பஹா கண்காணிப்பு மத்திய நிலையத்திலும் மிகச் சிறியளவாக பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

29 ஆம் திகதி ஏற்பட்ட அதிர்வு குருதெனிய , பாரகம , அநுரகம மற்றும் மயிலபிட்டி ஆகிய பிரதேச மக்களால் உணரப்பட்டுள்ளது. இதே போன்று இன்று ஏற்பட்ட நிலஅதிர்வு அம்பகொட மற்றும் அலுத்வத்த ஆகிய பிரதேச மக்களால் உணரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக நிபுணர்கள் 6 பேரைக் கொண்ட இரு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வுகளின் நிலத்தடி எல்லையை சூழ ஏற்பட்ட அதிர்வலைகள் நில அதிர்வு என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் விக்டோரிய நீர்தேக்கத்தை அண்மித்த பகுதி மற்றும் அந்த நிலப்பரப்பை அண்மித்த ஆழ் நில தட்டுக்களில் ஏற்பட்ட வெடிப்புகள் அல்லது சரிவுகள் இந்த நில அதிர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆரம்பகட்ட எதிர்வுகூறல்கள் காண்பிக்கின்றன.

1 comment:

  1. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
    (அல்குர்ஆன் : 67:16)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.