Header Ads



இந்தியாவுக்கு எதிராக போராடி, உயிர் தியாகம் செய்ய தயார் - அபயதிஸ்ஸ தேரர்


இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்யவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைகள் இயற்கையாக மரணமடைந்துள்ளன. அவற்றை மீண்டும் உயிரெழுப்ப கூடாது. இந்திய பிரதமர் சிறிய பரிசுடன் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.


150 மில்லியன் அமெரிக்க டொலர்களை தருகிறோம், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் அதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் எனக் கூறியுள்ளார்.


150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்காக மோடிக்கு மிக்க நன்றி. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு கூற அவருக்கு என்ன உரிமை உள்ளது?.


இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவவாதத்திற்கு அடிப்பணியாது போராடி உயிர்களை தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.


ஆனால் இந்திய அணியில் அமர்ந்து அரச உணவை உண்ண நாங்கள் தயாரில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினால், மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி பொய்யாக பேசிக் கொண்டிருக்க தேவையில்லை.


காரணம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் 13ஆவது திருத்தச் சட்டம் இருக்காது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. ஆசியாவின் அசிங்கம் இந்தியா இலங்கைக்குள் பல சதி வேலைகளை செய்துகொண்டு தன்னுடைய காலனித்துவதை இங்கு நிலைநாட்டுகின்றது. அதில் ஒரு அங்கமாக ஹிந்து தீவிரவாத கும்பல்களை இங்கு மிக பெரிய சதித்திட்டதோடு இயக்கிக்கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில் இந்திய ஹிந்து தீவிரவாத கும்பல் இலங்கையை சீரழிக்கும் நோக்கோடு பல திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றது இவர்களை இலங்கை அரசாங்கம் ஒழிக்காமல் இந்தியாவினால் வரப்போகும் ஆபத்தை தடுக்க முடியாது.சீனாவிற்கு எதிராகவும், யுத்தத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரும் உதவி புரிந்த பாகிஸ்தானுக்கு எதிராகவும் இவர்கள் இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். நேபாளம் எப்படி இந்தியாவை கை கழுவியதோ அதேபோல் இலங்கையும் இந்திய அசிங்கத்தை இங்கிருந்து துடைத்து எரிய வேண்டும்

    ReplyDelete
  2. @அஜன் நீர் கடந்தவருடம் இதே நேரத்தில் கோட்டாவின் ஆட்சி தான் வேண்டும் என்றாய். இப்போது அந்த ஆட்சியின் முக்கியமானவர்களை joker என்கிறாய்.😀😀😀😀😀😀

    ReplyDelete
  3. @NGK, உங்கள் கருத்துகளை பார்த்தால், நீங்களும் ஒரு joker போலுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.