Header Ads



ஹிஸ்புல்லா மனு மீதான, விசாரணை ஒத்தி வைப்பு


குற்றப் புலனாய்வு பிரிவால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிராஜ் ஹிஸ்புல்லா தமது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 


இந்த மனு இன்று (16) எல்.டீ.பீ. தெஹிதெனிய, ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராசா ஆகிய நீதியரசர்கள் குழு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


இதன் போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச பிரதி சொலி சட்டர்நாயகம் நெரின் புள்ளே, கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிராஜ் ஹிஸ்புல்ல தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறினார். 


எனவே, இன்று தமது கட்சிக்காரர் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தொடர்பான விடயங்களை முன்வைக்க பிரிதொரு தினத்தை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கோரினார். 


இந்த நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.