Header Ads



அரசின் பக்கம் செல்ல, முஸ்லீம் காங்கிரஸ் முயற்சி


- பாறுக் ஷிஹான் -

20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சிததலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லீம் கட்சியின் தவிசாளர் றுஸ்தி நஸார் தலைமையில் 20 ஆவது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் என்ற தொனிப்பொருளில் இன்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் 

20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களில்  மக்களை உசுப்பேற்றி 20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது என கூறி வந்திருந்தனர்.தங்களது சுயநலனுக்காக தற்போது பாராளுமன்றத்தில் இயற்றப்படும் இச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அரசின் பக்கம் இத்தரப்பினர் இணையவுள்ளதாக கூறி வருகின்றனர்.இதனால் தான் இத்தரப்பினர் ஏற்கனவே இச்சட்டத்தினை பற்றி சிறுபான்மையினருக்கு பாதிப்பு என கூறிய விடயம் உண்மை இல்லை என உறுதியாகின்றது.இச்சட்டம் குறித்து மக்கள் விழிப்படைய  வேண்டும்.முஸ்லீம் கட்சிகள் அரசுடன் திருட்டுத்தனமாக இணைந்து எத்தனை பெட்டி(பணம்) தருவீங்கள் பதவி தருவீர்கள் என்று இருக்காமல்  20 ஆவது சட்ட திருத்தத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று பின்னர் அதனை உரிய தரப்பினரிடம் கூற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என கூறினார்.

4 comments:

  1. All ceylon Muslim party? from where and when sprouted?

    ReplyDelete
  2. இவ்விடயம் சம்பந்தமாக எவரும் பெரியதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இந்நாட்டின் முஸ்லிம்களுக்கு தற்போதைய அரசினால் பெரிதாக எந்தப் பாதகமும் ஏற்படப் போவதில்லை. அப்படி எதுவும ஏற்பட்டால் அதற்கு தார்மீகரீதியில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கே உண்டு. அது அப்துல்மஜீத் ஹசரத் அவரகளையும் உள்ளடக்கும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. most muslim MPS will not be able to sleep or eat without power and position.whether 20th or even 100th amendment they will support the government for 1/2 or 3/4 minister post.even if a cabinet post in charge of import and distribution of pork is given to them they will accept same.what they need is power not policies-alla hooo akbar.

    ReplyDelete

Powered by Blogger.