Header Ads



இலங்கை - பலஸ்தீன் ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படவேண்டும் - நீதி அமைச்சர் அலிசப்ரி



சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் நீதித்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்யவும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் சைத் இன்று நீதி அமைச்சர் அலிசப்ரியை நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமிடையிலான கலந்துரையாடலின்போது, நீதித்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எடுத்துக்கூறினார்.

அத்துடன் இலங்கை மற்றும் பலஸ்தீன் இரண்டு நாடுகளுக்கிடையே நீண்ட காலத்தில் இருந்து  உறுதியான ஒத்துழைப்பு இருந்து வருகின்றது. இந்த ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.  அதேபோன்று புதிய அரசாங்கத்தினால் நாட்டுக்குள் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்  அமைச்சர் அறிவுறுத்தினார்.

இலங்கை, பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் இருந்து வரும் ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது பலஸ்தீன் தூதுவர் அமைச்சருக்கு எடுத்துக்கூறியதுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இந்த ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் உறுதியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார். 

(எம்.ஆர்.எம்.வஸீம்)


2 comments:

  1. பாலஸ்தீனத் தூதுவர் இலங்கையில் இருக்கும்போது, அவரும் கொரொனாவால் மரணித்தாலும் தகனம் செய்யப்படுவார் என்ற தற்போதைய சட்டம் தொடர்பிலும் ஓர் முயற்சிக்காய் பேசி இருந்தால் இன்னும் மேலாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. பாலஸ்தீனத் தூதுவர் இலங்கையில் இருக்கும்போது, அவரும் கொரொனாவால் மரணித்தாலும் தகனம் செய்யப்படுவார் என்ற தற்போதைய சட்டம் தொடர்பிலும் ஓர் முயற்சிக்காய் பேசி இருந்தால் இன்னும் மேலாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.