Header Ads



தங்களுக்கான புதைகுழிகளை தோண்டும், பாராளுமன்ற உறுப்பினர்கள் - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு


20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த புதைகுழிகளை தாங்களே தோண்டுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளகஜநாயக்க தெரிவித்துள்ளார்.


தற்போதைய ஆளும்கட்சியை என்றென்றும் பதவியில் வைத்திருப்பதற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையே 20வது திருத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் பின்னர் தாங்களும் தங்கள் கட்சியும் பாதுகாப்பாகயிருக்கலாம் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருதக்கூடும் என தெரிவித்துள்ள மஞ்சுள கஜநாயக்க சமூக ஊடகதளங்களால் அரசாங்கங்கள் கவிழக்கப்படலாம் என்பதையும் தாங்கள் எதிர்கட்சியில் இருக்கவேண்டிய நிலை வரலாம் என்பதையும் அவர்கள் மனதிலிருத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் ஏனைய ஆணைக்குழுக்களுக்கும் ஜனாதிபதியே உறுப்பினர்களை நியமிப்பார் என்பதால் தேர்தல் ஆணைக்குழு தனது சுயாதீன தன்மையை இழக்கும் என அவர்தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்களே தேர்தல் ஆணையாளரை நியமி;ப்பார்கள் என்பதால் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நால்வரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்களாகயிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.